விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

Oct 03, 2025,06:28 PM IST

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை. சமூக பொறுப்பை தவெகவினர் பின்பற்றவில்லை என நீதிபதி செந்தில்குமார் பல கேள்விகளை தவெகவின் மீது எழுப்பியுள்ளார். 


கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் இன்று ஒன்றன் பின் ஒன்றாக விசாரித்தனர்.




அப்போது நீதிமன்றம் பல கேள்விகளை தவெகவின் மீது தொடுத்துள்ளது. விஜய் பிரச்சார வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி வீடியோ உள்ளது. இதனை எட்டிப் பார்த்தும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது தொடர்பாக Hit and Run வழக்கு பதிவு செய்யப்பட்டதா? விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன தடை. புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டாமா உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


கரூரில் துயர சம்பவம் நடந்தும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்து சென்றபோது தவெக நிர்வாகிகள் மாயமானது ஏன். தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அங்கிருந்து மறைந்து விட்டனர். சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தவெகவின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  தவெக என்ன மாதிரியான கட்சி. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ. த.வெ.க கட்சித் தலைவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் இறந்திருக்கும்போது சம்பவ இடத்தை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக குறைந்தபட்சம் கட்சி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அந்தக் கட்சித் தலைவர் விஜய்யின் மன நிலையைக் எடுத்துக் காட்டுகிறது. சம்பவம் நடந்தும் அங்கிருந்து விஜய் மறைந்து விட்டார்.


ஆதவ் ஆர்ஜூனாவின்  மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? புரட்சி ஏற்படுத்துவது போல் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னால் இருக்கக்கூடி பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தொடர் கேள்விகளை தவெகவின் மீது வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?

news

விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

news

கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!

news

இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்

news

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

news

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்