சென்னை: உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 20 வருடமாக இருந்து வந்த சாதனையை விராட் கோலி முறியடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீது மோகம் கொண்டுள்ள அரசியல் தலைவர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்தான். இதை அவரே பலமுறை சொல்லியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலியின் ஒரு நாள் போட்டிகளுக்கான செஞ்சுரி சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
"கேப்டன்" விஜயகாந்த் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தேசமே இன்னிக்கு செம ஹேப்பிதான்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}