சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி இன்று காலமானார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த புகழேந்தி மிகவும் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடுமையான உழைப்பாளி. விழுப்புரம் மாவட்டத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர். திமுக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் கிளை செயலாளர் ஆகவும், ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட ஒன்றிய செயலாளர்.. மாவட்ட பொருளாளர்.. மாவட்ட அவை தலைவர்.. என படிப்படியாக உயர்ந்து தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் எம்எல்ஏ பதவ வரை உயர்ந்தவர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு அதே தொகுதியில் இவருக்கு சீட் வழங்கப்பட்டு போட்டுயிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மூன்று வருடங்களாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை புகழேந்தியின் உயிர் பிரிந்தது. இதனை அடுத்து புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இவருடைய இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவரிடம் எளிமையாக பழகும் திமுக எம் எல் ஏ வின் இறப்பு தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை முன்பு திரளான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}