புல்வாமா.. நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த 40 இந்தியர்களை நினைவுகூர்வோம்!

Feb 14, 2026,03:50 PM IST

- மயிலாடுதுறை  த.சுகந்தி,M.Sc,B.Ed


பிப்ரவரி 14  என்றால் நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். அந்த நாளை விட முக்கியமாக நாம் அனைவரும் நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டிய  நாள்.


அப்படி என்ன நாள்?




புல்வாமா நினைவு தினம் தான்.


இப்பொழுது உங்கள் நினைவிற்கு வருகிறதா? அந்த நாளின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம் .


இந்தியாவில்  மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாகப் புல்வாமா தாக்குதல் கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, ஜம்மு & காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


2019 பிப்ரவரி 14 அன்று, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த பேருந்து அணிவகுப்பை ஒரு தற்கொலைப் பயங்கரவாதி குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தால் மோதினார்கள். இந்த தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இந்த நிகழ்வு  ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக கருதப்பட்டது.


புல்வாமா தாக்குதல் இந்திய அரசியலிலும், பாதுகாப்பு சூழலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை பாலகோட் விமான தாக்குதல், என்ற நடவடிக்கையை மேற்கொண்டு, தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது என்பதை உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியது.


இந்த தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதும் துக்க அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


நம் நாட்டிற்காக உயிர் துறந்த வீரர்களின் தியாகத்தையும், அவர்களின் குடும்பங்கள் அடையும்  துயரத்தையும், நம்  நாட்டைக் காப்பாற்ற நினைக்கும் வீரர்களையும் இன்றைய நாளில் நாம் அவசியம் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் 


இன்றைய தினம் காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், இந்தியர்களுக்கு அது ஒரு துயர நாளாக மாறியதை நாம் மறக்கக்கூடாது. 


நாட்டை பாதுகாக்க பணியாற்றிய வீரர்கள் பலர் உயிரிழந்ததால், பிப்ரவரி 14 இப்போது “புல்வாமா நினைவு தினம்” என சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.


இந்திய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் புல்வாமா நினைவு தினத்தில், பெற்றோர்கள் தனது  குழந்தைகளிடமும்,ஆசிரியர்கள் மாணவரிடமும் கட்டாயம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இன்றைய நாளை நாம் துக்க நாளாக கொண்டாடாமல் இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் நாளாக கொண்டாடுவோம். தாய் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இன்றைய நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 

ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்