விழுப்புரம்: நாம் காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளையும் முறையா கொடுக்க வேண்டியது அதை விற்பவரின் கடமை. நாம் வாங்கும் பொருட்கள் சரியான முறையில் நமக்குத் தரப்பட்டதா என்பதை கவனித்து அப்படி கொடுக்கப்படாவிட்டால், தயங்காமல் தைரியமாக அதைக் கேட்பது நமது உரிமை. அதைத்தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி நிரூபித்துள்ளார்.
சாதாரண ஊறுகாய் என்று நாம் நினைக்கும் அதை, ஹோட்டல் நிர்வாகம் கொடுக்காமல் அலட்சியம் காட்டியதால் நுகர்வோர் கோர்ட் வரை சென்று கடுமையான அபாரத்தைப் பெற்றுத் தந்து நுகர்வோர்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வைக் கொடுத்துள்ளார் ஆரோக்கியசாமி.
விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவராக உள்ளார். இவர் தனது உறவினர் நினைவு தினத்தை ஒட்டி 2022ம் ஆண்டு விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமுருகன் ஹோட்டலில் ஊறுகாயுடன் 25 சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்து பெற்றுள்ளார்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், ஊறுகாய் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹோட்டலுக்குச் சென்ற அவர் ஊறுகாய் ஏன் வைக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் சரியாக பதில் சொல்லவில்லை போல. இதனால் ஊறுகாய்க்குப் பதில் காசைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு காசு தர முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் மறுத்து விட்டதாம்.
இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000, வழக்கு செலவுக்கு ரூ.5000, அத்துடன் ஊறுகாய் இழப்பீடாக ரூ.25ம் சேர்த்து மொத்தம் ரூ.35,025 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
45 நாட்களுக்கும் அபராத தொகையை வழங்க வேண்டும். 45 நாட்களுக்குள் வழங்காவிட்டால், மாதம் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கொடுக்காமல் அலட்சியம் காட்டிய உணவகத்திற்கு ரூ.35,025 ஆபராதம் விதித்து இருப்பது பலரையும் கவணிக்க செய்துள்ளது.
ஆனால் உண்மையில் ஆரோக்கியசாமி பாராட்டப்பட வேண்டியவர். சாதாரண ஊறுகாய்தானே என்றுதான் பலரும் அதை விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்திருப்போம்.. அது சாதாரண ஊறுகாயாக இருந்தாலும் அதற்குரிய பணத்தையும் நாம்தான் கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும்போது அந்தப் பொருளை கொடுக்காமல் விட்டது நமது உரிமையைப் பறிக்கும் செயல். இதைத்தான் ஆரோக்கியசாமி வழக்குத் தொடர்ந்து நிலைநாட்டியுள்ளார். மக்களுக்கு இதில் மிகப் பெரிய விழிப்புணர்வு செய்தி உள்ளது. பலரும் பல்வேறு பொருட்களை வாங்கும்போது அதில் சிறிய அளவில் ஏதாவது குறை இருந்தாலும் கூட சரி போய்ட்டுப் போகுது என்று போய் விடுகிறோம். அப்படி இருக்கக் கூடாது. பணம் கட்டி நாம் பெறும் ஒவ்வொரு சேவையிலும் நமது உரிமையும் அடங்கியுள்ளது. அது மறுக்கப்படும்போது நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை ஆரோக்கியசாமி வழக்கு நிரூபித்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)
நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
{{comments.comment}}