டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி விலகல் குறித்து தேவையில்லாத ஊகங்களுக்குள் யாரும் போக வேண்டாம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். தனது முடிவு குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் விராட் கோலி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு தற்போது வேறு வீரர் சேர்க்கப்படவுள்ளார். ஜனவரி 25ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 42.36 என்ற சராசரியுடன் 1991 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. அதேசமயம், கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}