சென்னை: கல்வி மட்டுமே நிரந்தரமான சொத்து.. எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் நம்மை விட்டு நீங்காத ஒரே சொத்து படிப்பறிவு மட்டுமே. அந்த படிப்புக்காகத்தான் எல்லோரும் மெனக்கெடுகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.பி. ஜெயசீலன் ஒரு பவர்ஃபுல் போட்டோவைப் போட்டு கல்வியின் முக்கியத்துவத்தை வார்த்தைகள் இல்லாமல் எளிமையாக விளக்கியுள்ளார்.
கல்வியைப் போல சிறந்த ஒன்று எதுவுமே இல்லை. கல்வி அறிவு இருந்தால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். ஏமாறுவதிலிருந்து தப்பிக்கலாம்.. வாழ்க்கையில் உயர்வு பெற கல்வி மிக மிக முக்கியம். கல்வியை ஆயுதம் என்றும் கூட சொல்லலாம். கல்லாமை என்ற இருளை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வி என்ற விளக்கு தேவை என்று சொல்வார்கள். ஒருவர் படித்தால் அந்த குடும்பமே உயர்வு பெறும், வெளிச்சம் பெறும். இதனால்தான் கல்விக்கு அத்தனை பேரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
குறிப்பாக பெண் கல்விக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக நம்ம தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு கல்விக்காக வழங்கப்படும் உதவிகள், அமல்படுத்தும் திட்டங்கள் அதிகம். குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில் தமிழ்நாடு எப்போதுமே முதலிடத்தில் இருக்கும். மத்திய அரசும் சரி, தமிழ்நாடு அரசும் கல்விக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஏராளம். எல்லாவற்றையும் பயன்படுத்தி பலரும் கல்வியில் மேம்பட்டு வருகிறார்கள்.
மாணவர்களுக்காக இலவச காலை உணவு, மதிய உணவு, அவர்களது படிப்புக்குத் தேவையான உதவிகள், உயர் கலவிக்குப் போகும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் என தமிழ்நாடு அரசு கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் கலெக்டர் டாக்டர் வி.பி. ஜெயசீலன் ஒரு போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அது ஒரு அலுவலகம். அங்கு ஒரு இளைஞர் அமர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சற்று தள்ளி ஒரு தச்சுத் தொழிலாளர் நிற்கிறார். இதில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர் மகன், தச்சுத் தொழிலாளி அவரது தந்தை. இந்தப் படத்தைப் பகிர்ந்த கலெக்டர், இந்தப் புகைப்படம் ஒரு சக்திவாய்ந்த கதையை நமக்குச் சொல்கிறது. இளம் சாப்ட்வேர் என்ஜீனியர், தொழில்நுட்ப நிபுணர், சாப்ட்வேர் டெவலப்பர் இதில் இருக்கிறார். அருகில் அவரது தந்தை தச்சுத் தொழிலாளியாக அதே அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
வறுமை மற்றும் சமூக அந்தஸ்தை கல்வி எப்படி இணைக்கிறது, எப்படி அந்த இடைவெளியை சரி செய்கிறது என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்தும். கல்வியின் முக்கியத்துவமும் புரியும் என்று கூறியுள்ளார் கலெக்டர் ஜெயசீலன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}