- பா. பானுமதி
விஷால் தினமும் பேருந்து பயணம் செய்வதால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் அவனுக்கு மாமா ஆகி விடுவார்கள் விஷால் நிறைய பேருக்கு மருமகன்.
திருப்பரங்குன்றம் குசவபட்டியில் வேலை செய்யும்போது விஷாலுக்காக சற்று நேரம் பஸ் காத்திருப்பது என்று நடக்கும் . விஷாலின் தன்னுடைய தின்பண்டங்களை எல்லாம் தன்னுடைய மாமாவிற்கு கொடுத்து அவர்களிடம் அன்பை பரிமாறிக் கொள்வான்.
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் சீட்டில் விஷால் அமர்ந்து கொள்வான். நடத்துனரும் விஷால் இடம் பேசிக் கொண்டே வருவார் அதில் ஒருவர் பெயர் காசிநாதன்.
விஷால் இடம் பிரியம் கொண்டு மாப்பிள்ளை என்று வாய் நிறைய அழைப்பார். அதை பார்த்த ஓட்டுநர் மாப்பிள்ளை என்கிறீர்களே உங்கள் பொண்ணை தரப் போகிறீர்களா என கேட்க...
"ஆமா பா... "

" விஷால் உனக்கு என் பெரிய பொண்ணு வேணுமா சின்ன பொண்ணு வேணுமா "
" சின்ன பொண்ணு எட்டாவது படிக்கிற ஆனா அவளுக்கு வாய் அதிகம் டா கண்ணாடி வேற போட்டு இருக்கா "
" வேணாம் அவ உனக்கு சரி பட்டு வரமாட்டா... நீ பெரிய பொண்ணையே கட்டிக்கோ "
" பெரிய பொண்ணு 12வது படிக்கிற பொறுமையா இருப்பா. உன்னை நல்லா பாத்துக்குவா... இடுப்புல தூக்கி வைச்சுக்கவா. சோறு ஊட்டு வா என்ன சொல்ற" எதற்கும் விஷால் இடமிருந்து பதில் இல்லை. அவன் மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்
" அண்ணா விஷாலுக்கு உன் மகளை பிடிக்கல போல" நடத்துனர்
"என்ன விஷால் ரெண்டு பேரும் புடிக்கலையா வேற யாரும் இல்லையே "
"மாப்ள! அத்தை மட்ட வேணும்னு கேட்டுராத"
" எனக்கு சமைச்சு போடவும் என் துணியை துவச்சு போடவும் அத்தையை தவிர யாருமே இல்லை "
இப்படி அவர் சொல்ல விஷாலுக்கு என்ன புரிந்ததோ வேகமாக சத்தமாக சிரித்து விட பேருந்தில் இருந்த அனைவரும் அதை கேட்டு சிரித்தனர்.
விளையாட்டு தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
தந்தையும் ஆன அன்னை!
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
{{comments.comment}}