சென்னை : நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம், விஷாலின் பிறந்த நாளான இன்று அவரது இல்லத்தில் மிக எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன.
நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளில் நடிகர் சாய் தன்ஷிகாவுடன் அவருக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் இந்த ஆண்டு மே மாதம் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், நடிகர் சங்கம் கட்டிடப் பணியின் காரணமாக திருமணத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம், சென்னை அண்ணாநகரில் உள்ள விஷாலின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, விஷால் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு சென்று வந்தார்.
விஷால் மற்றும் சாய் தன்ஷிகா பல வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்கள். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பற்றி சாய் தன்ஷிகா கூறியுள்ளார். "யோகி டா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசுகையில், "விஷால் அவர்களை எனக்கு 15 வருடமாக தெரியும். அவர் என்னை எப்போதும் மரியாதையுடன் நடத்துவார். நான் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் என் வீட்டிற்கு வந்து எனக்காக பேசினார். எந்த ஹீரோவும் இதுவரை இப்படி செய்தது இல்லை. அவருடைய இந்த செயல் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.
விஷால் அவர்கள் சாய் தன்ஷிகா பற்றி பேசுகையில், "அவள் ஒரு அற்புதமான நபர். கடவுள் சிறந்ததை கடைசியாக தருவார் என்று சொல்வார்கள். அதுபோல, கடவுள் தன்ஷிகாவை எனக்காக கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வோம்" என்று கூறினார். விஷால் சமீபத்தில் "மத கஜ ராஜா" என்ற படத்தில் நடித்திருந்தார். சாய் தன்ஷிகா கடைசியாக "ஐந்தாம் வேதம்" என்ற வெப் சீரிசில் நடித்திருந்தார்.
விஷால் தற்போது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இது அவர் மிகவும் முக்கியமானதாக கருதும் ஒரு பணி. இந்த பணி முடிந்தவுடன் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய் தன்ஷிகா தற்போது மற்றொரு வெப் சீரிசில் நடித்து வருகிறார். விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}