வாஷிங்டன்: அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் அலை பரப்பி வந்த நிலையில், திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத சர்ப்பிரைஸாக வந்தவர் விவேக் ராமசாமி. படு வேகமாக இவர் மக்களிடையே பிரபலமாகி வந்தார். இவரது அதிரடியான பேச்சுக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. எலான் மஸ்க் முதல் பலரும் இவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.
விவேக் ராமசாமிதான் குடியரசுக் கட்சி வேட்பாளராக வருவார் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனால் மீண்டும் தேர்தல் களத்தில் குதித்த டொனால்ட் டிரம்ப்புக்கே கூட கடும் சவாலாக மாறியிருந்தார் விவேக் ராமசாமி. இந்த நிலையில் தற்போது திடீரென வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விவேத் ராமசாமி.
இதுதொடர்பான அறிவிப்பை அயோவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் விவேக் ராமசாமி. அயோவாவில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளிடையே விவேக் ராமசாமிக்கு ஆதரவு சுத்தமாக இல்லை. வெறும் 2 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் தான் போட்டியிலிருந்து விலக முடிவு செய்தார் விவேக் ராமசாமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காதான் முதலில் என்ற நோக்கத்துடன் இரு வேட்பாளர்கள் உள்ளோம். இதில் நான் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளேன். இதை டிரம்ப்புக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டேன். எனது முழு ஆதரவுடன் அவர் இனி முன்னேறிச் செல்வார் என்றார் விவேக் ராமசாமி.
விவேக் ராமசாமியின் விலகல் மூலம், டொனால்ட் டிரம்ப்பின் கை தற்போது மேலும் ஓங்கியுள்ளது. அவரே மீண்டும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதற்கிடையே, அயோவா பிரதிநிதிகளின் 40 வாக்குகளில் 20க்கும் மேலானோரின் வாக்குகளை டிரம்ப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோவாவைத் தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் ஜனவரி 23ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதிலும் டிரம்ப்புக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்
உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}