- த.சுகந்தி,M.Sc,B.Ed
மயிலாடுதுறை: தேசிய இளைஞர் தினம் (National Youth Day) யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா ?
வீர முழக்கத்தை வழங்கிய சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கல்கத்தாவில் 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் நாள், மகர சங்கராந்தி தினத்தன்று, விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு இவரது பெற்றோர் இட்ட பெயர் நரேந்திரநாத்.
சிறு வயதிலிருந்தே தியான சித்தராகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்கிய நரேந்திரர் தனது பதினெட்டாம் வயதில் இராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த பிறகு ஆன்மீக வாழ்க்கையில் ஒரு தெளிவான பாதையைக் கண்டார். 1886-ம் வருடம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு நரேந்திரர் துறவறம் பூண்டு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஏற்றார். பிறகு நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது முப்பதாம் வயதில் அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு இந்து சமயத்தின் சார்பில் சொற்பொழிவுகளாற்றினார். அவற்றிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலை நாடுகளில் வேதாந்தமும் யோகமும் அறிமுகமாவதற்கு விவேகானந்தர் பெரும் பங்காற்றினார் .

பின்னர் இந்தியா திரும்பி இந்தியா முழுவதும் பல இடங்களில் சொற்பொழிவாற்றினா ர். குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், அவர்கள் ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் காணவும் தாய்நாட்டின் சேவைக்காக தம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்கும், ஊக்கமளிப்பதாகவும் விவேகானந்தரின் கருத்துக்கள் அமைந்தன.
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம்.
காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து.
"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
தமிழர்கள் பற்றி விவேகானந்தர்
சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே விவிலியம் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
விவேகானந்தரின் இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் ஆகியவற்றை நிறுவினார். இன்றும் இந்நிறுவனங்கள் மக்களின் ஆன்மீக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வருகின்றன. இளைஞர்களின் மனம் கவர்ந்த சுவாமி விவேகானந்தர் தனது 39-ம் இளம் வயதிலேயே ஜூலை 4,1902- ம் ஆண்டு இன்னுடல் நீத்தார்.
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கி இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரை இந்திய நாட்டின் பல தலைவர்கள் இவரது ஆக்கங்களைப் படித்து ஊக்கமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
தலைமுறை தலைமுறையாக இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் சுவாமி விவேகானந்தர் அவர்களுடைய பிறந்த தினமான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினம் என்ற பெயரில் வருடாவருடம் கொண்டாடப்படும் என்று 1984ஆம் வருடம் இந்திய அரசாங்கம் அறிவித்தது. அதன்படியே 1985 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இளைஞர்களாகிய நாம் அனைவரும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
{{comments.comment}}