மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. அவரது ரகசிய வாழ்க்கை குறித்து இன்னும் கூட தெளிவான தகவல்கள் இல்லை. இந்த நிலையில், தற்போது அவரது ரகசிய மகன்கள் குறித்த தகவலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரையில், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவாவுக்கும், புடினுக்குக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. இந்த உறவின் மூலமாக அலினாவுக்க 2 மகன்கள் பிறந்தனர். ஒரு மகனுக்கு வயது 9, இளைய மகனுக்கு வயது 5.
விலாடிமிர் புடின் தனது மகன்கள் குறித்த விவகாரத்தை ரகசியமாக வைத்திருந்தாலும் கூட அலினா மற்றும் தனது மகன்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். மிக மிக பாதுகாப்பான முறையில் இரு மகன்களையும் வைத்திருக்கிறார் புடின். அலினாவும், அவரது மகன்களும் யாருடைய தொடர்பிலும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
என்னதான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் இருந்தாலும் இவர்கள் மிக மிக சொகுசான ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களாம். அந்த அளவுக்கு அத்தனை வசதிகளையும் இவர்களுக்கு செய்து கொடுத்திருக்கிறாராம் புடின். விலாடிமிர் புடினுக்கு தற்போது 71 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே 39 வயதில் மரியா என்ற மகளும், 38 வயதில் காத்தரினா என்ற மகளும் முதல் மனைவி லூட்மிலா புடின் மூலமாக உள்ளனர். லூட்மிலாவை 1983ம் ஆண்டு மணந்தார் புடின்.
இந்த நிலையில்தான் தற்போது 41 வயதாகும் அலினாவுடன் 2008ம் ஆண்டு முதல் உறவில் இருக்கிறார் புடின். லூட்மிலாவை அதிகாரப்பூர்வாக விவாகரத்து செய்வதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உறவு ஆரம்பித்து விட்டது. இவர்களது முதல் மகன் இவான் சுவிட்சர்லாந்திலும், 2வது மகன் விலாடிமிர் ஜூனியர் மாஸ்கோவிலும் பிறந்துள்ளனர்.
மாஸ்கோவில் புடினுக்குச் சொந்தமான வீட்டில்தான் இரு மகன்களும் தற்போது வளர்ந்து வருகின்றனர். வேறு யாருடனும் இவர்களால் தொடர்பு கொள்ள முடியாது. அந்த அளவுக்கு இவர்களை பாதுகாப்பாக வைத்துள்ளார் புடின். அதேசமயம் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறதாம். இசைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி என எல்லாமே கற்றுத் தரப்படுகிறதாம். தனது தந்தையுடன் ஹாக்கி மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுப்பாராம் இவான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}