பிரதமர் மோடியை மிரட்டிப் பணிய வைக்க முடியாது.. விலாடிமிர் புடின் போட்ட ஒரே போடு!

Dec 09, 2023,03:12 PM IST

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின். 


மாஸ்கோவில் 14வது விடிபி முதலீட்டாளர் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரஷ்ய அதிபர் புடின் பேசியபோதுதான் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார். புடின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:


இந்தியாவின் நலன்கள் என்று வந்து விட்டால் பிரதமர் மோடி அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டார். அதில் உறுதியாக இருப்பார். அவரை மிரட்டியோ அல்லது அழுத்தம் கொடுத்தோ எந்த முடிவையும் எடுக்க வைக்க யாராலும் முடியாது.




பிரதமர் மோடியை ஒருவரால் மிரட்ட முடியும், அழுத்தம் தர முடியும், பணிய வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. எந்த முடிவையும் எடுக்க வைக்க அவரை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. நான் இதைப் பற்றி பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளேன். ஆனால் இதுகுறித்து நானோ அல்லது பிரதமர் மோடியோ பேசியதில்லை. 


இந்தியா - ரஷ்யா  இடையிலான உறவு பல்வேறு கோணங்களிலும் நன்றாக முன்னேறியுள்ளது. இரு நாடுகளின் உறவுகளும் வலுவடைய பிரதமர் மோடி அரசின் கொள்கையும் முக்கியமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையிலான வார்த்தகம் மேம்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி அரசு எடுத்த முடிவு சரியானதே என்றார் புடின்.


மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டி


இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக புடின் தெரிவித்துள்ளார்.  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அவர் வெற்றி பெற்றால், 5வது முறையாக அவர் அதிபர் பதவியை வகிப்பார்.




ரஷ்ய அரசியலை தன்னைச் சுற்றி இருக்குமாறு புடின் மாற்றி விட்டார். கடந்த 20 வருடமாக தனக்கு எதிராக செயல்பட்டு வந்த பல எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பலர் இறந்துள்ளனர். பலர் நாட்டை விட்டு ஓடி விட்டனர். கடந்த காலத்தில் அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார் என்ற போதிலும், அனைத்துமே  முறைகேடு செய்து பெறப்பட்ட வெற்றிகள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு தனக்கு சாதகமாக சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டார் புடின். அதாவது ஒருவர் 6 முறை அதிபர் பதவியை வகிக்கலாம் என்ற சட்டத் திருத்தமே இது. அதன்படி தற்போது 4வது முறையாக அதிபராக இருக்கும் புடின்,  இன்னும் 2 முறை அதிபர் பதவியை வகிக்க முடியும்.  அதிபர் பதவியின் ஆயுள் காலம் 6 ஆண்டுகளாகும். அந்த வகையில் பார்த்தால் அடுத்த 2036ம் ஆண்டு வரை புடினால் அதிபர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தனை காலம் இவர் பதவி வகித்தால், அதிக காலம் அதிபராகப் பதவி வகித்த சாதனையைப் படைப்பார். இதற்கு முன்பு சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலின்தான் அதிகபட்சமாக 29 வருடங்கள் வரை அதிபர் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய அதிபர் போரிஸ் எல்ஸ்டினிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றார் புடின். அன்று முதல் இன்று வரை அவரைச் சுற்றித்தான் ரஷ்ய அரசியல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்