டாக்கா: வங்கதேசத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. டாக்கா அருகே F-7 ரக போர் விமானம் ஒன்று கல்லூரி மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்காவிலிருந்து சுமார் 31 நிமிடம் பயண தூரத்தில் உள்ள உத்தராவில் இந்த விபத்து நடந்தது. மில்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி அருகே விமானம் விழுந்தது. விமானம் விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே புகை தெரிந்தது. விமானியின் நிலை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், F-7 BGI பயிற்சி விமானம் இன்று மதியம் 1:06 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு சேவை மைய கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி லிமா கானம் இது குறித்து கூறுகையில், டயபரியில் உள்ள மில்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. எங்கள் குழு ஒரு உடலை மீட்டெடுத்துள்ளது. விமானப்படை காயம் அடைந்த நான்கு பேரை மீட்டு சென்றுள்ளது என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விமானத்தில் இருந்த விமானிகள் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. விபத்துக்குள்ளான விமானம் பயிற்சி விமானம் என்று கூறப்படுகிறது. இது மக்கள் நிறைந்த பகுதியில் விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் இப்படித்தான் லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல இப்போது வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் போர் விமானம் விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா.. உடல் நிலை குறித்து கவனம் செலுத்தப் போவதாக கடிதம்
தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்... புரட்சிகரப் பாரம்பரியத்திற்கு ஒரு வீரவணக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
வி.எஸ். அச்சுதானந்தன்..மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்..கேரள முன்னாள் முதல்வர் காலமானார்
வங்கதேசத்தில் சோகம்.. கல்லூரி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. ஒருவர் பலி.. பலர் காயம்
புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பியது யார்.. போலீஸ் விசாரணை
வாங்கிங் போனபோது தலைசுற்றல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. நிகழ்ச்சிகள் ரத்து
Lunch tips: கத்தரிக்காய் பீர்க்கங்காய் கொத்சு.. சூப்பரான சைட் டிஷ்
இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே கண்டது: பிரதமர் மோடி பெருமிதம்
அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்.. டிஸ்மிஸ் ஆனதும் திமுகவில் இணைந்தார்
{{comments.comment}}