சென்னையில் மழை பெய்ததெல்லாம் ஓகேதான்.. குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் என்ன?

Nov 13, 2024,03:11 PM IST

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் மொத்தம் 5.95 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.


ஆறு நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 13.21 டிஎம்சி ஆகும். இதில் 45 சதவீதம் அளவுக்கு ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து நல்ல மழை பெய்ய வேண்டும். குறிப்பாக இந்த நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தால்தான் நீர் மட்டம் உயர்ந்து ஏரிகள் நிரம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 90 அணைகள் உள்ளன. இதில் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம் ,தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தால் கோடை காலத்தில் சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வராது என்பது குறிப்பிடத்தக்கது.




தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் நீடித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக  சென்னை புறநகர் பகுதிகளில் மழை தொடர்வதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம்:


பூண்டி நீர்த்தேக்கம்:


மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.05 அடி (462 மில்லியன் கன அடி)


தற்போது 310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 377 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 16.93அடி (2394 மில்லியன் கன அடி)


404 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 219 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 2.14 அடி (108மில்லியன் கன அடி)


69 கன அடி தண்ணீர் வரும் நிலையில், ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 16.47(1812 மில்லியன் கன அடி)


மொத்தம் 415 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 134 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 30.34 அடி ( 304 மில்லியன் கன அடி)


தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்துக்கு வரும் 15 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


வீராணம்:


மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 6.05 அடி ( 872 மில்லியன் கன அடி)


ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. ஆனால் 248 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்