வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமாக உள்ள 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு மாவட்டம் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. குறிப்பாக முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை போன்ற பகுதிகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள ராணுவத்தினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இதுவரை அடையாளம் தெரியாத 8 பேர் உடல்களை, அடையாளம் காண்பதற்கு உறவினர்கள் யாரும் வருவார்களா என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்து 8 பேரின் உடல்களை அடையாளம் காணவில்லை. இதனால் அடையாளம் காணாத சடலங்களை நல்லடக்கம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து மேப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சடலங்களும் புத்துமலை அருகே ஒரே இடத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஏழாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 1000 பேர் ஈடுபட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}