வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அங்கு பதினோராவது நாளாக மீட்பு பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
மலையாள மொழி பேசும் மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது அவர்களின் பாரம்பரிய பண்டிகையும் கூட. இப் பண்டிகை பத்து நாட்கள் வரை மிகச் சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும் தாரைமட்டமானது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் மீட்க்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பதினோராவது நாளாக இன்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மறுவாழ்விற்க்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை தவிர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஷிப் நடத்தும் படகு போட்டியையும் சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}