பேரிடர் மீட்புப் படை, ராணுவத்துடன்.. இணைந்த இஸ்ரோ.. தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்பு பணி தீவிரம்!

Aug 02, 2024,06:31 PM IST

வயநாடு:   வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பள்ளி குழந்தைகள் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மீட்புப் பணியில் இராணுவத்துடன் இஸ்ரோவும் கைகோர்த்துள்ளது. தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.


வயநாடு மாவட்டம் முண்டகை சூரல் மலைப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்து வந்த 400  குடும்பங்கள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இருப்பினும் மீட்பு படையினர் மீட்பு பணியினை துரிதப்படுத்தி தீவிரமாக செயல்படுத்தி வந்தனர். இதுவரை 3,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 316-ஆக உயர்ந்துள்ளது. இதனால் முண்டக்கை சூரல் மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்ப பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நிலச்சரிவில் 27 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 23 மாணவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்துடன் இஸ்ரோவும் கைகோர்த்துள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்ரோ மீட்பு ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 


இதுதவிர மண்சரிவு ஏற்பட்ட அப்பகுதிகளை RISAT SAT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து இஸ்ரோ முழு தகவல்களையும் வழங்கி உள்ளது. அதன்படி கடந்த முறை ஏற்பட்ட மண் சரிவை விட இது பன்மடங்கு பெரியதான மண் சரிவு என்று தெரிய வந்துள்ளது. மண்சரிவு ஆரம்பப் புள்ளியிலிருந்து 8 கிமீ பயணித்து முடிந்திருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளது.


தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம்: 


நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஏற்கனவே மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கருவி மூலம் மூன்று கிலோமீட்டர் ஆழம் வரை மண்ணில் புதைந்திருக்கும் உடல்களை கண்டறிய முடியும். மேலும் சேறு சகதியில் சிக்கி இருக்கும் உடல்களையும் இந்த தெர்மல் ஸ்கேனர் கண்டறிய உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


ஏ கிளாஸ் ஸ்கேனர்:


இதனைத் தொடர்ந்து நாளை முதல் ஏ கிளாஸ் தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏ கிளாஸ் ஸ்கேனர்  மூலம் 12 கிலோமீட்டர் தூரம் அடியில் இருக்கும் உடல்களையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்