சென்னை: தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கேரளாவில் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கேரளா செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஓட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்சி நீடித்து வருவதால் நேற்று வால்பாறை, கூடலூர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள்,பணிக்குச் செல்வோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இப்பகுதியில் உள்ள கூழாங்கல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை தீவிரமடைந்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி வால்பாறையில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் அட மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மற்றும் அதன் ஒட்டிய மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் நீலகிரி, வால்பாறை, கூடலூர், தேவாலா, பந்தலூர், அவலாஞ்சி, முகூர்த்தி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும்.
திருப்பூர்,தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலும் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர தென்காசி, நெல்லை,மதுரை, விருதுநகர், போன்ற பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
கேரளா முழுவதும் பரவலாக அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், கண்ணூர், திருச்சூர், வயநாடு, இடுக்கி மூணாறு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் சூப்பர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
கேரளாவில் வரும் 28ம் தேதி வரை மழை நீடிப்பதால் வயநாடு, மூணாறு, இடுக்கி மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வரும் ஜூன் 29 முதல் மழை அளவு படிப்படியாக குறையும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}