அரியலூர்: மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். என்னங்க பெரிய பணம். அரசியலுக்கு வந்துதான் பணத்தை சம்பாதிக்கனுமா என்ன. உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேற வேலையும் எனக்கு இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
திருச்சி பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அரியலூர் சென்ற விஜய் அங்கு பெரும் திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். திருச்சியில் மைக் மக்கர் செய்த நிலையில் அரியலூரில் மைக் தெளிவான முறையில் இருப்பதை ஏற்கனவே அமைப்பாளர்கள் உறுதி செய்து வைத்திருந்தனர். இதனால் அரியலூரில் விஜய் பேசியது பளிச்சென கேட்டது. திருச்சியில் விட்டதை அரியலூரில் ஸ்கோர் செய்து விட்டார் விஜய்.
அரியலூர் கூட்டத்தில் விஜய் பேசியதிலிருந்து:
மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். என்னங்க பெரிய பணம். அரசியலுக்கு வந்துதான் பணத்தை சம்பாதிக்கனுமா என்ன. உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேற வேலையும் எனக்கு இல்லை
எப்பப் பாரு மக்கள் கடலோடு, மக்கள் கடலாகவே இருக்கானே என்று எதிர்க்கட்சிகள் நம்மைப் பற்றி கண்ணாபின்னாவென்று பேச ஆரம்பித்துள்ளனர். நாம மரியாதையாக பேசினால் கூட தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அண்ணா சொன்ன அந்த பன்ச்தான்.. வாழ்க வசவாளர்கள். அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.
மதுரை மாநாட்டில் சொன்னது போல உங்களை சந்திக்க வந்துள்ளேன். பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்பதற்காக வந்துள்ளேன். இந்த பாஜக அரசு கொஞ்ச நஞ்ச கொடுமையாங்க செய்யுது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களைக் காணோமாம். ஓட்டுத் திருட்டு. வீட்டு நமம்பர் 0 போட்டு ஓட்டேர் ஐடி கொடுத்திரு்ககாங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். மாநில அரசுகளைக் கலைத்து விட்டு ஒட்டுமொத்தாக தேர்தல் வைக்கும் ஐடியா. வேறென்ன, ஒரே நேரத்தில் தில்லமுல்லுகளை ஈசியா செய்ய முடியுமே அதற்காக. இதுக்குப் பெயர் என்ன, ஜனநாயகப் படுகொலைதானே.
மறுபக்கம் தொகுதி மறு சீராய்வு. அதிக தொகுதிகளை வட இந்தியாவுக்குக் கிடைக்குமாறு மோசடி செய்து வருகிறார்கள். இதை தவெக முதலிலேயே எதிர்த்தது. தொடர்ந்து எதிர்ப்போம். தென்னிந்தியாவின் பவரைக் குறைப்பதற்காக செய்யப்படும் மோசடி வேலை இது.
பாஜக அரசுதான் துரோகம் செய்யுதுன்னு பார்த்தா,
திமுக அரசும் நம்ப வைத்து ஏமாற்றுது. நான், நீங்க எல்லாருமே நல்லது செய்வாங்கன்னு நினைச்சுதான் அவங்களைத் தேர்ந்தெடுத்தோம். 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கு. முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிட்டோம்னு மனசாட்சி இல்லாமல் கதை விடறீங்களே.. மை டியர்.. வேண்டாம் வேண்டாம் உங்களுக்குத்தான் ஆசையா கூப்பிட்டா பிடிக்க மாட்டேங்குதே.. சிஎம் சார்.. நீங்க விடுவது அம்புட்டுமே ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போச்சு.
அரியலூர் மாவட்டத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாதது ஏன். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்கவில்லை. முந்திரி உற்பத்திதான் பிரதானம். முந்திரி தொழிற்சாலை என்னாச்சுன்னு தெரியலை. சிமென்ட் மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்கவில்லை. போதுமான பேருந்து வசதி இல்லையே. இத்தனைக்கும் இந்த மாவட்டத்துக்காரர்தான் போக்குவரத்து அமைச்சர்.
என்னடா இவன் கேள்வியா கேக்கறானே வந்தா என்னா செய்வான்னுதானே கேக்கறீங்க. தீர்வை நோக்கி போவதும், தீர்வைக் காட்டுவதும்தான் நமது லட்சியமே. தேர்தல் அறிக்கையில் விளக்காமாக, தெளிவாக எல்லாவற்றையும் சொல்வோம். அதற்கு முன் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டோம். மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தருவோம் என்றார் விஜய்
{{comments.comment}}