சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது விரைவில் வலுவடையும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சால் புயல் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது வங்க்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது வலுவடைந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்புச் செய்தி:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைய கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பதினோராம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரை பகுதிகளில் ஒட்டி நிலவ கூடும்.
8ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை - தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
10ம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11ம் தேதி - கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ம் தேதி - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
{{comments.comment}}