சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய தாழ்வு பகுதியாக உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கன முதல் மிக கனமழை:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று கன மழை:
கடலூர், மயிலாடுதுறை ,நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையை பொருத்தவரை இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.இதனை தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}