பிறக்கும் ஆண்டு பிறந்தாயிற்று.. வழக்கம்போல்.. புத்தாண்டு வாழ்த்துகள்.. சொல்லி கடந்து விடாமல்!

Jan 02, 2026,04:36 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


புதிய ஆண்டு

பொலிவுடன் பிறந்தாயிற்று

புதிய குழந்தையாய் 

தவழுவோம்- நாமும் 

பழையன மறந்து 

புதியன சிந்திப்போம்

விதியென நினைக்காமல்

சரியென நினைத்திடுவோம்




ஒவ்வொரு நாளும்

புத்தாண்டு போல

மகிழ்ந்திடுவோம்

நம்மை தோற்கடிக்க

எது வந்தாலும்

தைரியமாய்

முன் செல்வோம் -ஏனென்றால்

ஒவ்வொரு நாளும்

புதிய நாளே


அன்பை விதைத்து- நல்

மனிதர்களை 

அறுவடை செய்வோம்

சமுதாயத்திற்கு

விரோதமான செயல்களை 

சாக்கடையில் 

ஊற்றிவிட்டு 

சகோதர 

சகோதரிகளாய்

பயணம் செய்வோம் 


பொல்லாங்கன் எய்தும் 

அம்புகளை -பொடி

பொடியாக்கி விட்டு

சிறுவர் சிறுமியாய்

மாறிவிடுவோம் 

சின்னதாய் 

புன்னகை 

புரிந்திடுவோம்


பிறக்கும் ஆண்டு

பிறந்தாயிற்று 

வழக்கம்போல்

புத்தாண்டு வாழ்த்துகள்

என்று சொல்லி 

கடந்து விடாமல்

மனிதருக்காய்

சமுதாயத்திற்காய் 

தேசத்திற்காய் 

ஏதோ ஒரு மாற்றம் 

கொண்டுவர

புதிய ஆண்டிற்குள்

புன்னகையுடன்

நுழைந்திடுவோம்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பரிசு தொகுப்பு.. ஜனவரி 8ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!

news

நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!

news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,

news

அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!

news

பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

news

பிறக்கும் ஆண்டு பிறந்தாயிற்று.. வழக்கம்போல்.. புத்தாண்டு வாழ்த்துகள்.. சொல்லி கடந்து விடாமல்!

news

ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்