சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கரூர் வழக்கு என்பது எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்யோ சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணைக்கு கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.
யார் சார்ந்த நபராக இருந்தாலும் கரூர் துயரச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை. குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும். அடுத்து குறுக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. நானே குறுக்கு விசாரணை நடத்தப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}