Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

Sep 01, 2025,02:50 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 25 செப்டம்பர் மாதம் திங்கட்கிழமை பிறந்துள்ளது. இந்த மாதத்தின் சில முக்கியமான நாட்கள் மற்றும் தேதிகளை பற்றி இப்பதிவில் காண்போம்..


செப்டம்பர் மாதம் ரோமானிய நெருப்பு கடவுளான வல்கனுடன் தொடர்புடையது. இது பண்டைய ரோமானிய நாட்காட்டியின் ஏழாவது மாதமாகும்.செப்டம்பர் என்ற பெயர் "செப்டெம்" என்னும் இலத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது.அதாவது "ஏழு" என்பதனை குறிக்கிறது.


 1.செப்டம்பர் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை மனித உடலுக்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக, மக்களிடையே ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவதற்காக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏழாம் தேதி வரை "தேசிய ஊட்டச்சத்து வாரம்" அனுஷ்டிக்கப்படுகிறது.


2. செப்டம்பர் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை தென்னை பயிரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் "உலக தேங்காய் தினம்" அனுஷ்டிக்கப்படுகிறது. 




3. செப்டம்பர் 3ஆம் தேதி வானளாவிய கட்டிட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. வானளாவிய கட்டிடங்கள் என்பது ஒரு நகரத்தின் வானலையை வரையறுக்கும் மிக உயரமான  கட்டிடங்கள். மனிதனின் தொழிற்  துறையில அவனுடைய தலை சிறந்த படைப்பை உருவாக்கும் திறனை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.


4. செப்டம்பர் 5 : ஆசிரியர் தினம்- இந்தியாவின் இரண்டாவது  ஜனாதிபதியாக இருந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவருடைய பிறந்த நாளை குறிக்கும் வகையில் நம் நாட்டில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வருங்கால   தூண்களான திறமை மிக்க மாணவர்களை உருவாக்கும் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களின் பணிகளை பாராட்டும் வகையில் ஆசிரியர் தினம்  அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது.


5. கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை செப்டம்பர் ஐந்தாம் தேதி அனைத்து மலையாள மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனுஷ்டிக்கப்படுகிறது. புராண மன்னர் மகாபலி யின்  வருகையை நினைவு கூறும் வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஓணத்தை இந்தியா முழுவதும் இருக்கும் மலையாள மக்கள் பத்து நாள் விழாவாக ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்வர். இந்த நாளில் விருந்துகள்,பாரம்பரிய படகு பந்தயங்கள், மற்றும் துடிப்பான மலர் கம்பளங்களால் அலங்கரித்து ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


6. செப்டம்பர் 5ஆம் தேதி பல முஸ்லிம்கள் "மிலாது நபி"யை கடைபிடிக்கின்றனர். இந்த நாள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாகும். மேலும் இது நபி தினம், மவ்லித், முகமதுவின் பிறந்தநாள் அல்லது நபியின் பிறந்தநாள் என்று அழைக்கப்படுகிறது.  மிலாது  நபி ஒரு பொது விடுமுறை நாளாக. பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை நாளாகும் .


7. செப்டம்பர் 5 கருணையின் சின்னமாக விளங்கும் அன்னை தெரசாவின் நினைவு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறதுஅன்னை தெரசா அவர்கள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இறந்தார். அந்த நாள் அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்னை தெரசா அவர்கள் கொல்கத்தாவில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். ஐக்கிய நாடுகள் சபை அன்னை தெரசாவின் தொண்டு, மற்றும் வறுமையை எடுத்து போராடிய அவருடைய அயராத முயற்சிகளைப் போற்றும் வகையில் செப்டம்பர் 5ஆம் நாள் பன்னாட்டு "தொண்டு நாள் "என்றும் அறிவித்துள்ளது. அன்னை தெரசா அவர்கள் அவருடைய வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் மூலம் அன்பு,கருணை மற்றும் தன்னலமற்ற  சேவையின் அடையாளமாக திகழ்ந்தார்.அவரது பணியின் தொடர்ச்சியாக இன்றும் பல சமூக நல அமைப்புகள் அவருடைய பெயரில் செயல்படுகின்றன.


செப்டம்பர் 8 ஆம்  தேதி "சர்வதேச எழுத்தறிவு" தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒரு முக்கியமான எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒவ்வொரு ஆண்டும்  இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


செப்டம்பர் மாதத்தில் முதல் வாரம் இத்தனை சிறப்புகள் உடையது. மேலும் தென்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் அனைத்து வளங்களும் நலங்களும் அருளட்டும்.இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் செப்., 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!

news

Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

news

ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!

news

காஞ்சனா 4.. பேய்ப் படத்தில் ராஷ்மிகா.. ராகவா லாரன்ஸின் அடுத்த அதகளம் ரெடி.. வேற லெவல் பிளான்!

news

ரஜினியைத் தொடர்ந்து இவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.. நெல்சன் வெளியிட்ட ஆசை!

news

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்றே கடைசி.. EC மீது எதிர்க்கட்சிகள் புகார்

news

எங்கு சென்றாலும் தமிழன் இருப்பான்.. நம் தொப்புள்கொடி உறவு அறுந்துவிடவில்லை: முதல்வர் முக ஸ்டாலின்

news

சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்