- பாவை. பு
டெல்லி: மேற்காசியா நாடுகளில் நடந்து வரும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்து அதிரடி காட்டி வருகிறது. போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கப் போகிறது. இப்போதைக்கு அது முடிவது போலவும் இல்லை. இந்தப் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் மற்றும் கச்சாஎண்ணெய் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்ட ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளது. இதன் வழியாகவே உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வணிகம் நடைபெற்று வருகிறது. போர் சூழலால் ஈரான் அரசு இந்த கடல் வழிப்பாதையை மூடியதால் உலகளவிலான வர்த்தகங்கள் கடுமையாக முடங்கியுள்ளன.
முக்கியமாக ஈரான், சவுதி, கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், துபாய் போன்ற நாடுகளுக்கு இந்த ஈரானின் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக தான் அந்நாட்டின் முக்கிய தேவையான உணவு பொருட்கள் செல்கிறது. அந்ந நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியாகி சொல்கிறது. இது தற்போது தடைப்பட்டதால் தான் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணம். இதனால் இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறைந்த 25 க்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்நாட்டு எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் போர் நடைபெற்று வரும் இந்த கடினமான சூழலிலும் இந்திய அரசு எடுத்த முயற்சியால் முதலில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது.. அதுபலத்த பாதுகாப்புடன் எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்தது. ஒவ்வொரு கப்பலுக்கும் ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்கி தான் வர வேண்டியுள்ளது. ஈரான் அரசு தற்போது இந்தியா மட்டுமின்றி அதன் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் மற்ற நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் பாதிப்பு பெரிதாக இல்லை என்றாலும் வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. போர் நீடித்தால் நிச்சயம் நமக்கும் சிக்கல் ஏற்படும் சூழலே உள்ளது. குறிப்பாக ஹர்முஸ் ஜலசந்தி முற்றிலுமாக மூடப்படும் நிலை ஏற்பட்டால் சிக்கலாகும். காரணம், அமெரிக்கா தரைப்படைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அது நடந்தால் நிச்சயம் ஹரஸ்முஸ் ஜலசந்தி முற்றிலும் ஸ்தம்பிக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தற்போதைய சூழல் குறித்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டி ஆலோசனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
அதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு, அதன் விநியோகம் போன்றவை குறித்தும் போர் சூழல் பாதிப்புகள் அதன் தாக்கம் குறித்தும் போர் நீடிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் திட்டம் என்ன, அதனை எவ்வாறு மாநில அரசுகள் நடைமுறை படுத்த வேண்டும் என்பது பற்றியும் கலந்தாலோசனை நடைப்பெறவுள்ளாக தெரிகிறது.
இந்த கூட்டத்திற்கு டீம் இந்தியா அதாவது ஒன்றுபட்ட உணர்வுடன் செயல்பட பிரதமர் அழைத்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அந்த மாநில முதல்வர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதில் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்பார்கள்.
சென்னையில் 13 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை
மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு
மேற்காசிய விவகாரம்: மாநில முதல்வர்களுடன் இன்று.. பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
குட்டி ஹாலந்து பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா.. சூப்பர் ஊருங்க.. வாங்க போலாம்!
இலக்கியப்பீடம் சிறுகதைப் போட்டி: செங்கல்பட்டு இரா. கலைச்செல்விக்கு இரண்டாம் பரிசு!
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
{{comments.comment}}