கொல்கத்தா: 2026 சட்டசபை தேர்தலில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜக.வை எதிர்கொள்ள அக்கட்சி தவறிவிட்டது என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக,ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடைசி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெருபான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்படாதது தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தன.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி கூறுகையில், அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசி அவர், டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் வளைந்து கொடுத்து இருக்க வேண்டும். காங்கிரசால் டெல்லி மற்றும் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியின் பயணத்தை காங்கிரஸ் கெடுத்து விட்டது.அது மேற்கு வங்கத்தில் நடக்காது. நமது வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாததே ஹரியானா, டெல்லி தோல்விக்கு காரணம். தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}