"அச்ச உணர்வு".. ஆளுநர் ஆர். என். ரவி கிளப்பிய புயல்.. "அப்படி எல்லாம் இல்லை".. அர்ச்சகர்கள் மறுப்பு!

Jan 22, 2024,10:53 AM IST

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி. போட்ட டிவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.


இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சாமி கும்பிட்டார். அதன் பிறகு அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அந்த டிவீட்டில் அவர் கூறியிருந்ததாவது:


இன்று காலை  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது.




பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.


அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.. அர்ச்சகர் பதில்


ஆளுநரின் இந்த  டிவீட் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுநரின் கூற்றை மறுத்து அந்தக் கோவில் அர்ச்சகர் மோகன் பட்டர் என்பவர் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சன் நியூஸ் சானலுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில்,  அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இப்போ  நீங்க சொல்லித்தான் தெரியுது. நாங்க  யாருமே அப்படி இல்லை. புரோட்டோகால் பாலோ செய்யச் சொன்னார்கள், அதை பாலோ செய்தோம். அவ்வளவுதான். இன்று விசேஷம் என்பதால் நேற்று இரவு முதல் யாருமே தூங்கவில்லை. நாலைந்து பேர், கைங்கர்யம் செய்வோர் சரியாவே தூங்கலை. புஷ்ப அலங்காரம், சாமிக்கு அலங்காரம்,  நைவேத்யம் ரெடி செய்வது ஆகிய காரணத்தால் தூங்கவில்லை.


அனைவரும் டயர்டாக இருக்கிறோம்


எங்களுக்கு டயர்ட்னெஸ் இருந்தது. என் கண்ணைப் பார்த்தாலே தெரியும். ரெஸ்ட் இல்லாததால் அவருக்கு அப்படி தெரிந்திருக்கும். தேவஸ்தானம் நல்லாவே கோஆபரேட் செய்து சாமி தரிசனம் செய்து வைத்தோம். அவரும் மகிழ்ச்சியாகவே சென்றார். பிரசாதம் வாங்கிச் சென்றார். கோவில் தல வரலாறு  குறித்துக் கேட்டார். அவருக்கு விளக்கிக் கூறினோம்.  அவர் சொன்னது போல அரசிடமிருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை.  எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்