-வ. துர்கா தேவி
வெள்ளாவி
வச்சுத்தான் வெளுத்தாங்களா
என பார்க்கும் போதெல்லாம்
பாடத் தோன்றும்
ஒரு அழகுச் சிலை
அவள்.
வெண்பஞ்சுப் பாதங்களுடன்
தரைக்கும்
நோகாமல்,
தனக்கும்
நோகாமல்
மெல்ல
அடி மேல் அடி
எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

எட்டி நின்று
பார்க்கும் பழக்கமெல்லாம்
அவளுக்கு இல்லை.
சற்று
ஒதுங்கியே
நடந்தாள்.
நேரம்
செல்லச் செல்ல
அவளுக்கும்
ஒரு உந்துதல்.
என்ன தான்
நடக்கிறது
என்று
பார்ப்போமே என…
அவளும்
பெண்தானே!
பார்த்த கணம்
திகைத்தாள்.
புரியாமல்
தவித்தாள்.
புரிந்த பிறகு
சிரித்தாள்.
திகைத்தாள்—
ஆம்!
வெண்தாளில்
அழகான
ஆட்டுக்குட்டி
வரைந்திருந்தான்
அவன்.
இதில்
திகைக்க ஒன்றுமில்லையே..
ஆட்டுக்குட்டி
நின்றிருந்த
இடமோ
மிகப்பெரிய
ஆடுகளம்!
ஆடுகளத்தில்
ஆட்டுக்குட்டி
நிற்பதும்
யாரும் காணா
அதிசயமில்லையே...
ஆட்டின்
கால்களுக்கு கீழ்
ஏதோ
உருண்டையான
ஒன்று.
“நேற்று இல்லாத
மாற்றம் என்னது?”
என்று சிந்தித்த
கணம்—
எல்லாம்
விளங்கியது.
“வாலிபால்
ஆடுகளம்
வரைக”
என்ற
கேள்விக்கு
அந்தச் சிறுவனின்
அறிவார்ந்த
பதில் தான் அது.
“சிப்காட் -
குறிப்பு வரைக”
என்ற கேள்விக்கு
என்ன வரைய வேண்டும் என்று
என்னைக் கேட்ட
அந்த
தேர்வரை விட—
தானாகவே
கற்பனை
வெள்ளத்தை
அவிழ்த்து விட்ட
எனக் கூறினேன்
என் தோழியிடம்,
அவள் தன்
அனுபவத்தை
பகிர்ந்த போது.
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}