பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

Aug 15, 2025,05:28 PM IST

டெல்லி: இந்த வருடம் இந்தியாவுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியர்களுக்கு குறிப்பாக தொழில் துறையில் இருப்போருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஒரு விஷயம் எது என்றால் அது ஜிஎஸ்டியாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பலரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். அதில் பெருமளவு சீர்திருத்தங்கள் தேவை என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அதிருப்திகளும் அதிகமாகவே உள்ளன. இந்த நிலையில்தான் பிரதமரின் அறிவிப்பு சர்ப்பிரைஸாக வந்துள்ளது.




இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் இந்த ஆண்டு பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் தீபாவளிக்கு முன்பாக அமலுக்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம், பொதுவான பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகள் பெருமளவில் குறைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.


மத்திய அரசு இந்த சீர்திருத்தங்களுக்கான மும்முனை திட்டத்தை வெளியிட்டுள்ளது. இது மேலும் விவாதங்களுக்காக அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு வரும். சரி என்னெல்லாம் சீர்திருத்தம் வர வாய்ப்பிருக்குன்னு பார்ப்போமா.


ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது, 2017 ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த மறுபரிசீலனைக்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மாநிலங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன. அதன் பிறகு புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.


இது சாதாரண மக்களுக்கான பொருட்களின் வரிகளை கணிசமாகக் குறைக்கும். நமது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பெருமளவில் பயனடைவார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும், இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.


பொதுவான மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது மற்றும் வரி அடுக்குகளை குறைப்பது இதன் நோக்கம். ஸ்டார்ட்அப்களுக்கான பதிவு செயல்முறையை எளிதாக்குவது, முன்-நிரப்பப்பட்ட வருமானங்களைச் (pre-filled returns) செயல்படுத்துவது, மற்றும் வேகமான பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை உறுதி செய்வது ஆகியவை இதில் அடங்கும்.


வரி விகிதங்களை சீரமைப்பது, பொருட்களின் விலையை குறைக்கும், இதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும். ஒரு நிலையான மற்றும் தற்போதைய தேவைக்கு ஏற்ற ஜிஎஸ்டி விகிதங்களைக் கொண்ட ஒரு புதிய அமைப்பு, பொருட்களின் விலையை கணிசமாக குறைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு

news

காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்