Exit polls 2024: 2014 மற்றும் 2019 தேர்தல்களில்.. எக்சிட் போல் முடிவுகள் கணித்தது என்ன?

Jun 01, 2024,06:30 PM IST

டெல்லி: எக்சிட் போல் முடிவுகள் எப்போதுமே படிக்கவும், பார்க்கவும் சுவாரஸ்யமானவை. அந்த வகையில் நடப்பு லோக்சபா தேர்தல் குறித்த எக்சிட் போல் முடிவுகளும் கூட மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.


பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் தவறாகத்தான் போகும். காரணம், மக்களின் தீர்ப்பையும், அவர்கள் சொல்லும் கருத்தையும் துல்லியமாக கணிக்கிடுவது என்பது மிக மிக சவாலானது. மிக மிக அரிதாக ஏதாவது ஒரு சில எக்சிட் போல் முடிவுகள், உண்மையான தேர்தல் முடிவுகளை ஒட்டி அமையும். எந்த ஒரு எக்சிட் போல் முடிவும் இதுவரை இந்தியாவில் உண்மையான முடிவுகளை அப்படியே பிரதிபலித்தது இல்லை.


2014ம் ஆண்டுதான் பாஜக , நரேந்திர மோடி தலைமையில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசு 2019 தேர்தலிலும் வென்று 2வது முறையாக ஆட்சியில் நீடித்தது. தற்போது மீண்டும் ஒரு முறை ஆட்சியமைக்க அது ஆர்வமாக காத்திருக்கிறது. 




2014 தேர்தலின்போது பல்வேறு நிறுவனங்கள் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டன. அதுகுறித்த ஒரு பார்வை இதோ:


தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கணித்த நிறுவனங்கள்:


நியூஸ் 24 - சாணக்கியா - 340 தொகுதிகள்

சிஎன்என் ஐபிஎஎன் சிஎஸ்டிஎஸ் - 280 தொகுதிகள்

இந்தியா டுடே - சிசரோ  - 272

ஏபிபி நியூஸ் - நீல்சன் - 274

என்டிடிவி - ஹன்சா ரிசர்ச் - 279

டைம்ஸ் நவ் ஓஆர்ஜி - 249


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து கணித்த நிறுவனங்கள்:


நியூஸ் 24 - சாணக்கியா - 101 தொகுதிகள்

சிஎன்என் ஐபிஎஎன் சிஎஸ்டிஎஸ் - 97 தொகுதிகள்

இந்தியா டுடே - சிசரோ  - 115

ஏபிபி நியூஸ் - நீல்சன் - 97

என்டிடிவி - ஹன்சா ரிசர்ச் - 103

டைம்ஸ் நவ் ஓஆர்ஜி - 148


தேர்தல் முடிவு:


தேசிய ஜனநாயகக் கூட்டணி - 336, பாஜக 282

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 60, காங்கிரஸ் - 44


தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்பான நியூஸ் 24  சாணக்கியா கணிப்பு கொஞ்சம் உண்மையான தேர்தல் முடிவுடன் ஒத்துப் போயிருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை அனைத்துக் கணிப்புகளும் சரிவர இல்லை.


2019 லோக்சபா தேர்தல் எக்சிட் போல் முடிவுகள்:


தேசிய ஜனநாயகக் கூட்டணி:


நியூஸ் 24 - சாணக்கியா - 350 தொகுதிகள்

இந்தியா டுடே - ஏக்சிஸ் -  339 டூ 365

டைம்ஸ் நவ் விஎம்ஆர் - 306

நியூஸ் 18 இஸ்பாஸ் - 336

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் -300

சுதர்சன் செய்தி - 305


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி:


நியூஸ் 24 - சாணக்கியா - 95 தொகுதிகள்

இந்தியா டுடே - ஏக்சிஸ் -  77 டூ 108

டைம்ஸ் நவ் விஎம்ஆர் - 132

நியூஸ் 18 இஸ்பாஸ் - 82

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் - 120

சுதர்சன் செய்தி - 124


தேர்தல் முடிவுகள்:


பாஜக 303, தேசிய ஜனநாயகக் கூட்டணி 352.

காங்கிரஸ் 52, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 91.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்