சென்னை: டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, பாமக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் என்ன என்பது தொடர்பாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவின் இந்த மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டனர். அதாவது தேர்தலுக்கான பணிகளை தீவிரபடுத்த ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்சிகளும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கட்சியின் நிலைப்பாடுகளையும் எடுத்துரைத்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பாமக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இருப்பினும் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும்,அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது இவர்கள் கட்சியையும் தாண்டி குடும்ப விவகாரம், கட்சி விவகாரம், மோதல் என பல்வேறு விஷயங்களை பொதுவெளிகளில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியில் முகுந்த நியமனம் தொடர்பாக அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது பூதாகரமாக வெடித்தது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதனால் முகுந்தன் தன் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஒரு கட்டத்தில் கட்சியில் சமூக உறவு ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், கட்சியின் கட்டுப்பாடு யார் கையில் இருக்கும் என்பது தொடர்பாக அப்பா மகன்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் எழுந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக டாக்டர் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது ராமதாஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பொது மேடைகளில் இருவருமே வெளிப்படையாக மோதிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணி குறித்து பல்வேறு அடுக்கான குற்றங்களை முன்வைத்துள்ளார்.இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
ஏனெனில் அன்புமணிக்கு தலைமை பண்பே கிடையாது. மத்திய கேபினட் அமைச்சராக நியமித்து நான் தவறு செய்து விட்டேன். பாமக என்னும் அழகான கட்சியை கண்ணாடி போல் ஒரே நாளில் நொறுக்கி விட்டார். பாமக வளர்ச்சிக்கு இடையூறாக பல தவறுகளை செய்து வருகிறார். அன்புமணி இன்னும் பக்குவப்படவே இல்லை. இந்த செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருக்கிறது என கூறியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் அன்புமணி குறித்த குடும்ப பிரச்சனையை வெளியில் கொண்டு வந்திருக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்கள் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினரின் கருத்துக்கள் எல்லாம் கேட்ட பிறகு, கட்சியின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பாமகவில் நிலவும் உட்கட்சி பூசலால் ஏற்பட்டுள்ள பரபரப்பு தற்போது டாக்டர் ராமதாஸிடம் இருந்து அன்புமணி பக்கம் திரும்பி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}