உடலில் சர்க்கரை அளவு குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா ?

Dec 31, 2023,05:32 PM IST

 டில்லி : டயபடிக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதி மட்டுமல்ல உடலில் சர்க்கரை அளவு குறைவது மிக ஆபத்தான ஒன்று தான். ஆரம்பத்திலேயே இதனை சரிய செய்யா விட்டால் உயிரையே குடிக்கும் ஆபத்தான் நிலை ஏற்பட்டு விடும். இதை எப்படி சரி செய்யலாம் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.


உங்கள் உடலுக்கு தேவையான அளவு இல்லாமல் ரத்தத்தில் குலுகோசின் அளவு குறைவதை லோ சுகர் அல்லது ஹைபோக்ளைகோமியா என்கிறோம். இது டயபடிக்ஸ் டைப் 1 இருப்பவர்களிடமும் இருக்கும். சராசரியாக ஒரு மனிதனின் உடலில் ரத்தத்தில் ஒரு டெசிலிட்டருக்கு 70 மில்லி கிராம் சர்க்கரை இருக்க வேண்டும்.  அதற்கு கீழ் குறைவதை ஹைபோக்ளைகிமியா என்றார்கள்.  ஆனால் சர்க்கரை நோய் இல்லாத பெரும்பாலானவர்களுக்கு ஹைபோக்ளைகிமியா நிலை ஏற்பட்ட சர்க்கரையின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 55 மில்லி கிராம் என்ற அளவிற்கு குறைந்து விடுவதுண்டு.




உடலில் சர்க்கரை எப்படி உற்பத்தியாகிறது :


உங்கள் உடலில் இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும் போது இந்த நிலை ஏற்படலாம். அல்லது அதிகமாக மது அருந்தினாலும் இது போல் ஏற்படும். உங்களுடைய கல்லீரல் குலுகோஸ் அளவை உற்பத்தி செய்து, தேவைப்படும் போது ரத்த நாளங்களுக்குள் வெளியிடும். ஆனால் உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, ஹிப்பாடிடிஸ், அட்ரீனல் சுரப்பியில் பிரச்சனை போன்றவை இருந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். 


நீங்கள் சாப்பிட்ட பிறகு வயிற்றில் செரிமான பணிகள் துவங்கும் போது அந்த உணவு கார்போஹைட்ரேட், குலுகோஸ் என தனித்தனியாக பிரியும். உங்களுடைய உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது உங்களுடைய கணையம் இன்சுலினை வெளியிடும். அது உங்களின் உடலில் அதிகமாகும் குலுகோசை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும். அதிகப்படியாக குலுகோஸ்கள் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சேமிக்கப்படும். ஆனால் நீங்கள் நீண்ட நேரமாக சாப்பிடாமல் இருந்தால் உங்களின் உடலில் சர்க்கரை அளவு குறைய துவங்கி விடும். இதனால் இதயத்துடிப்பும், இதயத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.


சர்க்கரை குறைவதன் அறிகுறிகள் :




அதிகப்படியான இன்சுலின் ஊசிகள் எடுத்துக் கொள்வது, சரியான நேரத்திற்கு இன்சுலின் போட்டுக் கொள்ளாதது, சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, வழக்கத்திற்கு மாறாக அதிக வேலை செய்வது, அதிகமாக மது அருந்துவது, உணவில் கொழுப்பு, புரோட்டின், நார்சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளாததும் சர்க்கரை அளவு குறைய காரணங்களாகும். சர்க்கரை அளவு குறைவதற்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். உடல் பலவீனப்படுதல், வியத்தல், குளிர்தல், நடுக்கம், அதிகப்படியான பசி, இதய துடிப்பு அதிகரிப்பது, தலைபாரம், குழப்பம், கவலை, உதடு, நாக்கில் வறட்சி ஏற்படுதல், பார்வை மங்குதல், மற்றவர்கள் மீது எரிச்சல் போன்றவை ஏற்படும்.


உடலில் சர்க்கரை அளவு குறைந்தால் செய்ய வேண்டியவை :




உடலில் சர்க்கரை அளவு குறைவதை உணர்ந்தால் உடனடியாக உங்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் யாரிடமாவது தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை அவர்களிடம் சொல்லி உதவி கேட்க வேண்டும். இதற்கு டாக்டர்கள் அறிவுறுத்தும் உடனடி சிகிச்சை உடனடியாக குலுககானை உடலில் செலுத்திக் கொள்வது. இது போல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் எப்போதும் கையில் சீஸ், மிட்டாய் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


சமீபத்திய செய்திகள்

news

11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு எம்.பி.க்கு தேசிய விருது!

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா? இதோ முழு விபரம்!

news

உழைப்பே உரமாகும் (கவிதை)

news

கிச்சனா இது.. இப்படி கலீஜா இருக்கே.. கவலைப்படாதீங்க சிஸ்டர்ஸ்.. பிடிங்க cleaning டிப்ஸ்!

news

திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

news

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிராஸ்டேட் புற்றுநோய்.. தீவிரமடைந்திருப்பதாக தகவல்!

news

தமிழ்நாடு முழுவதும் பரலாக நல்ல மழை.. சென்னையை டோட்டலாக கூலாக்கிய தொடர் மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்