சென்னை: கமல்ஹாசனின் பெயரை முன்னால் போட்டு விட்டார்கள்.. அது தவறு.. ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டார். அவர் பெயரைத்தான் முன்னாடி போட்டிருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள், இருவரும் இணையும் படம் தொடர்பான டைட்டில் பார்த்து முனுமுனுத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் உண்மையில் இதற்குப் பின்னால் பல நிகழ்வுகள் நடந்துள்ளதாக இரு தரப்பையும் அறிந்த படக் குழுவினர் புன்னகையுடன் சொல்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ரஜினிகாந்த சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கூட, கமல்ஹாசன்தான் சீனியர். ரஜினிக்கு முன்பே நடிக்க வந்தவர். சிறு வயது முதலே நடித்து வருபவர். முதல் படத்திலேயே ஸ்டாராக உருவெடுத்தவர். ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் படத்தின்போது கமல்ஹாசன் ஒரு ஸ்டாராக பரிமளித்து வந்தார். இதை ரஜினிகாந்த் எந்த இடத்திலும் மறந்ததில்லை, மறுத்ததும் இல்லை. உரிய முறையில் அவர் பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எனது கலையுலக அண்ணா என்றுதான் கமல்ஹாசனை அவர் எப்போதுமே அழைப்பார்.
இருவரும் இணைந்து நடித்த காலத்திலும் கூட பெரும்பாலும் கமல்ஹாசன்தான் ஹீரோவாக நடித்திருப்பார். ரஜினி பல படங்களில் 2வது ஹீரோதான். இந்த வரிசை தொடரக் கூடாது. தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் உங்களை ஓரம் கட்டி விடுவார்கள். அல்லது வில்லனாகவே பார்ப்பார்கள் என்று கூறி கமல்ஹாசன்தான் இக்கூட்டணியை பிரித்தார். அது கூட ரஜினிகாந்த்தின் நல்லதுக்காகத்தான். இதையும் கூட இருவரையும் அறிந்தவர்கள் நிறைய முறை சொல்லியுள்ளனர்.
கமல்ஹாசன் கணித்தது போலத்தான் நடந்தது. தனியாக வந்த ரஜினிகாந்த் விஸ்வரூபம் எடுத்தார். கூடவே கமல்ஹாசனும் பட்டையைக் கிளப்பினார். இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறி தமிழ்த் திரையுலகை அப்படித் தாங்கினார்கள், கொண்டாடத்தக்க வகையிலான படங்களையும் கொட்டிக் குவித்தார்கள். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் செய்த சாதனைகளை அவர்களுக்குப் பின்னால் வந்த யாருமே செய்ததும் இல்லை, இனி யாரும் செய்யப் போவதும் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் இருவரையும் இணைக்க கடுமையான முயற்சிகள் நடந்தன. கே.பாலச்சந்தர் முயன்றார், ஷங்கர் முயன்றார், மணி ரத்தினம் முயன்றார்.. எதுவுமே நடக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் நேற்று வந்த நெல்சனுக்குக் கிடைத்துள்ளது அவர் செய்த அதிர்ஷ்டம்தான்.
கலையுலகில் கமல்ஹாசன்தான் சீனியர் என்பதால் அவரது பெயரை முதலில் போட வேண்டும் என்று ரஜினிகாந்த்தான் நெல்சனிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் லாஜிக் படி இதுதான் சரியானதும் கூட. கமல்ஹாசன் பெயரை பின்னால் போட்டிருந்தால்தான் அது தப்பாகப் போயிருக்கும். அந்தத் தவறு இதில் நடக்கவில்லை என்பதே இந்த இரு பெரும் கலைஞர்களின் பக்குவத்திற்கு ஒரு சின்ன உதாரணம். பெயரை எப்படிப் போட்டாலும் யாரும் குறைந்து போய் விடப் போவதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
அதேபோல இப்படத்தின் கதை, இயக்குநர் ஆகிய தேர்வில் கமல்ஹாசன் தலையிடவில்லையாம். மாறாக, ரஜினிக்கு பிடித்த கதை எனக்கும் ஓகே.. அவர் டிக் அடிக்கும் இயக்குநர் எனக்கும் ஓகே என்று கூறி விட்டாராம். இது கமல்ஹாசன் என்ற நடிகர் மீதான அவரது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ரஜினியுடன் இணைந்து நடிப்பதுதான் கமல்ஹாசனுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. ரஜினிக்கும் அப்படியே. அதைத்தான் இருவரும் இந்தப் படம் தொடர்பான பூர்வாங்கப் பணியிலிருந்து இப்போது வரை பின்பற்றி வருகின்றனராம்.
எனவே இந்தப் படம் மிகப் பெரிய அளவில் உருவாகப் போகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கமல்ஹாசன் ஒரு விழாவில் சொன்னது போல, எங்க வேலை நடிப்பது.. அது பிடிச்சிருக்கா இல்லையா என்பதை நீங்கதான் சொல்லணும் என்று ரசிகர்களிடம் பொறுப்பை விட்டு விட்டார்.. அதுவும் உண்மைதான்..!
நாம் காத்திருப்போம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}