சென்னை : மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல்வர் விஜய்யின் அடுத்த அடுத்த அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தமிழக சட்டசபையில் தவெக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
சட்டசபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் 9 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தவெக.,விற்கு தேவை. வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல் அல்லது சத்தியபாமா ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவெக பெற போகும் லாபங்கள் :

சட்டசபையில் இரண்டு எம்எல்ஏ.,க்களை கூடுதலாக தந்தது மட்டுமல்ல, பல வழிகளில் இந்த இடைத்தேர்தல் தவெக.,விற்கு சாதகமான சூழலை அரசியல் களத்தில் உருவாக்கி உள்ளது.
1. தவெக.,வின் பலம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், "எந்த நேரத்திலும் தவெக அரசு கவிழ்ந்து விடும்" என்ற திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் பேச்சுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக கட்சியில் வந்து இணைந்தவர்களை வேட்பாளராக்கி, வெற்றி பெற வைத்து விட்டதால், இனி அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்தும் பலர் தவெக பக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தவெக தனிப் பெரும்பான்மையை பெரும் நிலை ஏற்படலாம்.
3. இடைத்தேர்லுக்கு பிறகு தவெக கூட்டணியில் இருந்து விலகலாம், ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளை தவெக.,வின் இந்த வெற்றி சற்று யோசிக்க வைக்கும். ஒருவேளை தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் தவெக.,விற்கு ஆதரவு தர பாமக தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக பெற்ற வெற்றிக்கு பாமக, மறைமுகமாக அளித்த ஆதரவும் காரணம் என சொல்லப்படுகிறது. தவெக-பாமக கூட்டணி உறுதியாவதற்கு முன்னோட்டமாகவே, இன்று பாமக தலைவர் அன்புமணிக்கு, முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
4. இதற்கு முன்பு வரை திமுக, அதிமுக கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் பக்கம் தாவலாம் என நினைத்த தவெக எம்எல்ஏ.,க்களும் தற்போது பின்வாங்குவார்கள். இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதுடன், தனது கட்சி எம்எல்ஏ.,க்களையும் தவெக தக்க வைத்துக் கொண்டு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.
5. ஒருவேளை காங்கிரஸ் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் ஆட்சி கவிழாமல் இருக்க அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கிடைப்பதிலும் சிரமம் இல்லாத நிலை தற்போது உருவாகி உள்ளது.
விஜய்யின் அடுத்த அரசியல் மூவ் எப்படி இருக்கும்?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் தொடுத்த வெற்றி தவெக.,விற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக மற்றும் அதன் மாஜிக்களுக்கு எதிரான பிடியை தவெக அரசு இன்னும் இறுக்க வாய்ப்பு அதிகம்.
அமைச்சரவை, கூட்டணி என பலவற்றிலும் தவெக மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தவெக அரசு மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதோடு அடுத்தடுத்த தேர்தல்கள், குறிப்பாக 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தேசிய அரசியலிலும் தவெக தடம் பதிக்க வாய்ப்புள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
{{comments.comment}}