75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம்.. இதையே விவாதிக்கப் போகிறார்கள் சிறப்புக் கூட்டத்தில்!

Sep 14, 2023,12:04 PM IST
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18ம்தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது. இது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெறும் முக்கிய விவாதம் குறித்த விவரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, அரசியல் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக, நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், கற்றல்கள் என பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

தேர்தல் கமிஷனர் மசோதா இதைத்தவிர மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களும் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. .இதில் முக்கியமாக தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதைப்போல வக்கீல்கள் மசோதா 2023, பத்திரிகைகள் பதிவு மசோதா 2023 போன்ற மசோதாக்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

அதிகம் பார்க்கும் செய்திகள்