சென்னை : கடந்த 4 நாட்களாக காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஓபிஎஸ்-முதல்வர் சந்திப்பு குறித்த சலசலப்புக்கு தனது அறிக்கை மூலம் விளக்கம் அளித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எதற்காக இவர் தற்போது இந்த நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார் என்ற கேள்வி பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
எதிர்பார்த்தபடி ராஜ்யசபா சீட் வழங்கவில்லை, தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க கூட அனுமதி வழங்கவில்லை என்பது போன்ற பல காரணங்களால் பாஜக மீது அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த வாரம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கே சென்று நேரில் சந்தித்து பேசி விட்டும் வந்தார். அதுவும் ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார். 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதா? நீங்கள் திமுக கூட்டணியில் இணைகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "முதல்வரை நலம் விசாரிக்க சென்றதாகவும், அரசியலில் நிரந்தர எதியும் இல்லை; நண்பனும் இல்லை என்றும், போக போக எல்லாம் புரியும் என்றும்" சூசகமாக சொல்லி விட்டு சென்றார்.
இதனால் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைய போவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் ஓபிஎஸ் முதல்வரை சந்தித்து விட்டு வந்ததும், கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ள ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்த பாஜக முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. அதற்கு பிறகும் மீடியாக்களில் ஓபிஎஸ், திமுக.,வில் சேர போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. முதல்வரும், ஓபிஎஸ்.,ம் தினமும் சந்தித்து கொள்கிறார்கள் என்றெல்லாம் பலவிதமாக செய்திகள் பரவின. கடந்த 4 நாட்களாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ், நேற்று மாலை ஒரு அறிக்கை, இன்று காலை ஒரு அறிக்கை என வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், முதல்வரை நலம் விசாரிக்கவும், அவரது சகோதரர் மு.க.முத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவும் தான் சென்றேன். திமுக.,வில் இணைய போவதாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றெல்லாம் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். இதனால், நலம் விசாரிக்க சென்றவர் எதற்காக ஒரே நாளில் இரண்டு முறை முதல்வரை சந்திக்க வேண்டும்? நான்கு நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு நீண்ட விளக்கத்துடன் அறிக்கை வெளியிட என்ன காரணம்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அரசியல் வட்டார தகவல்களின் படி, பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ்.,ஐ தங்கள் பக்கம் இழுக்க தான் திமுக முயற்சி செய்துள்ளததாம். 2026 சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பிற்கு 5 சீட்கள் ஓதுக்கவும், வெற்றி பெற்றால் ஓபிஎஸ்.,க்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கவும் டீல் பேசி முடிக்கப்பட்டு விட்டதாம். இதே கோரிக்கையை தான் பாஜக.,விடம் ஓபிஎஸ் கேட்டாராம். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக, ஓபிஎஸ்.,ன் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாம்.
இதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட திமுக, அதை தாங்கள் தருவதாக ஓபிஎஸ் இடம் பேசி உள்ளதாம். ஆனால் அதற்கு பிறகு தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் முதல்வருடன் பேசியதால் மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் இழுப்பதற்காக ஓபிஎஸ்.,க்கு தருவதாக சொன்ன 5 சீட்களை, ஒரு சீட்டாக திமுக குறைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ஓபிஎஸ், திமுக பக்கம் சென்றால் அதிமுக ஓட்டுக்கள் பிரியும், தொண்டர்களிடம் அதிருப்தி அதிகரிக்கும். அதோடு ஓபிஎஸ் மூலமாக வரும் முக்குலத்தோர் ஓட்டுக்கள், தென் மாவட்ட ஓட்டுக்கள் வராமல் போகுமே என பதறிப் போன பாஜக, ஓபிஎஸ் இடம் சென்று சமாதானம் பேசி உள்ளதாம். அவர் கேட்கும் கோரிக்கையை ஏற்க தயாராக இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் பிரதமர் மீண்டும் தமிழகம் வரும் போது அவரை சந்திக்க வைப்பதாகவும் கூறி உள்ளதாம். பாஜக.,வின் வார்த்தைகளை ஏற்று, சமரச முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளாராம் ஓபிஎஸ்.
திமுக.,விற்கு செல்லும் முடிவை தான் கைவிடுவதாக தொண்டர்களுக்கும், திமுக தலைமைக்கும் சூசகமாக தெரிவிக்க தான் இந்த விளக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}