- ஸ்வர்ணலட்சுமி
வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் 6 என்ற எண்ணுக்கும் ஆறு முகனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய சிறு தகவல்களை பார்ப்போம்...
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு அவரவர் வழக்கப்படி நெற்றியில் விபூதி, சந்தனம்,குங்குமம் இட்டு பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகம் இருந்தால் மலர்களால் அலங்கரித்து, சஷ்டி விரதம் இருக்கும் பலன் முழுவதும் கிடைக்க முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை முதலில் வேண்டிக்கொண்டு,பிறகு குலதெய்வத்தை மனதார நினைத்து, ஆறுமுகனை அகம் ஒன்றி கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டிக் கொள்வது சிறப்பு.
பூஜை அறையில் "ஷ ட்கோண" கோலமிட்டு, நெய் தீபம் ஏற்றி,தீப,தூப ஆராதனைகள் செய்து, முருகன் மந்திரங்களை படிப்பது சிறப்பு.
படிக்க நேரம் இல்லாதவர்கள் அதனை ஒலிக்க கேட்பது மனதார "ஓம் சரவணபவ "எனும் "ஷ டாக்ஷர " மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பு. திருச்செந்தூரில் கந்த சஷ்டி ஆறாம் நாள் முருக பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு கடலில் நீராடுவர். பிற ஊர்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து மாவிளக்கு ஏற்றுவது சிறப்பு. மேலும் பச்சரிசி சாதம் தயிர் உடன் சேர்த்து விரதத்தை நிறைவு செய்வது நல்லது.
கந்தன் அருளால் நல்வாழ்வு,ஆரோக்கியம், ஆயுள்,புகழ்,செல்வம், மகப்பேறு, திருமணம், கல்வி,நல்ல வேலை, சொந்த வீடு, இவையாவும் அவரவர் வேண்டுதல்கள் படி நிறைவேறும். நம் பிறவிப் பிணி நீங்கி முருகன் அருள் எப்போதும் துணை நிற்கும்.
முருகப்பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் உரிய தொடர்பு :

ஆறு என்ற எண் முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்பு உடையது. முருகனுடைய திருமுகங்கள் ஆறு, முருகன் ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன் , முருகன் மந்திரம் ஓம் "சரவணபவ" ஆறு எழுத்து, முருகனுடைய இருப்பிடம் ஆறுபடை வீடு ஆறு, சஷ்டி விரதம் -வளர்பிறை, தேய்பிறை சஷ்டி வருவதும் ஆறாம் நாள், சஷ்டி திதிக்கு நாயகனாகவும் சஷ்டி விரதத்திற்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் முருகப்பெருமான்.
" முருகு" என்றால் "அழகு".
'மு ' - என்பது முகுந்தன் என்கிற விஷ்ணு.
' ரு ' - என்பது ருத்ரன் என்கிற சிவன்.
'க '-கமலத்தில் உதித்த பிரம்மன்.
முருகன் :-பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல்,காத்தல், அழித்தல் எனும் மூன்று தொழில்களையும் முருகன் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
ஆறுமுகமான -சண்முக தத்துவம்...
ஒருமுகம்- மகாவிஷ்ணு
இருமுகம் -அக்னி
மூன்று முகம்- தத்தாத்ரேயருக்கு
நான்முகம் -பிரம்மனுக்கு
ஐந்து முகம் - சிவன்
ஆறுமுகம் -கந்தன்
இவையே சண்முக தத்துவம் ஆகும்.
ஆறுபடை வீடுகள் :
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திரு திருக் கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுமையாக தரிசிக்கலாம். அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை 'சூரசம்ஹாரம்' திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
அனைவரும் கந்தன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
{{comments.comment}}