- இரா.மும்தாஜ் பேகம்
தங்களை வருத்திக்கொண்டு காட்டையும் வீட்டையும் விற்று படிக்க வைத்த பெற்றோரையும் ஏமாற்றி தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டு தகுதியை உயர்த்தி விட்ட நாட்டையும் மறந்து, பெற்றோருக்கும் சேவை செய்யாமல் நாட்டுக்கும் சேவை செய்யாமல் அயல் நாடுகளில் அடிமைகளாய் வாழும் நம் மாணவர்கள் பெற்றது தரமான கல்வியா?
அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் படையெடுத்து வந்து நம்மை அடிமையாய் வைத்திருந்தான். அது கல்வியறிவு இல்லாத காலம். ஆனால், இப்போது நம் படித்த இளைஞர்கள் நாட்டுப்பற்று, அன்பு,கருணை போன்ற மனிதநேயம் என்ற சொற்களை மருந்துக்கும் இல்லாமல் ஆசை என்ற பேய் பிடித்து கார் வாங்க வேண்டும், பங்களா வாங்க வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் அதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும். ஆதலால் அயல்நாடுகளில் அவர்களாகப் போய் அடிமைகளாய் வாழ்கின்றனர். அவர்களுக்கு கிடைத்த கல்வி தரமான கல்வியா? சிந்தியுங்கள், அவன் சம்பாதிக்கும் பணம் அவன் பெற்றோருக்கும் சந்தோஷம் அளிக்கவில்லை நாட்டுக்கும் பயன்படவில்லை இன்று IT field ல் வேலை பார்ப்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெருகி வருகிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி தரமான கல்வியா?

தொண்ணூறு சதவீதம் கல்லூரி மாணவிகள் காதல் வலையில் சிக்கி அதில் சில திருமணம் என்னும் பந்தத்தில் சிக்கி பிறகு முறையற்றவன், பண்பற்றவன், சோம்பேறி என்றெல்லாம் பண்பாட்டை மறந்து ஊடகங்கள் வாயிலாக உலகத்துக்கே கேட்கும் படி ஒப்பாரி வைத்து பேட்டி கொடுத்து பிறகு மணவிலக்கு கேட்டு வீதியிலும் நீதிமன்றத்திலும் நிற்பவர்கள் எத்தனை பேர்.
அவர்கள் படித்தவர்கள் தானே. அவர்களின் சிந்தனை எங்கே.. அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லையா?
சிந்திக்க மறந்தவன் செத்தாருள் வைக்கப்படுவான்.
சிந்தனையை வளர்க்காத கல்வி சிறந்த கல்வியா? தரமான கல்வியா என்ற ஐயப்பாடுகள் என் மனதில் ஆயிரமாயிரம். இன்றைக்கு பெண் பிள்ளைகள் மது அருந்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. பாலியல் தொல்லைகளால் படும் துயரங்கள் ஏராளம். ஏமாற்று வேலைகளும் படித்தவர்களால் தானே நடைபெறுகிறது. இன்று ஏன் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது. கருவறையில் இடம் கொடுத்த தாய்க்கு அவர்கள் வீட்டின் ஒரு இருட்டறையில் கூட இடமில்லையா. ஒரு மாணவன் தன் பெற்றோருக்கும் இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உகந்தவனாக உருவாக்குவது தரமான கல்வி தரமாண கல்வியை தந்திருந்தால் முதியோர் இல்லங்களே இருந்திருக்காது.
ஒரு ஆசிரியர் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை நல்லொழுக்கம் உள்ள மாணவனாக உருவாக்கியிருந்தால் கூட ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சம் நல்ல குழந்தைகளாவது உருவாகி இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு ஆசிரியர்களும் உருவாக்கி இருந்தால் இன்றைக்கு இந்த சமுதாயமே நல்ல ஒழுக்கம் உள்ள சமுதாயமாக இருந்திருக்கும் ஆசிரியர்களை நான் குறை கூறவில்லை. எங்கே தப்பு நடக்கிறது என்பதை ஆராய்ந்து களைய வேண்டும்.
எத்தனை புதிய முறைகள் கல்வியில் வந்தாலும். எத்தனை கல்வி தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும். பண்பட்ட மாணவர்களாலேயே தரமுள்ள கல்வியை பெற முடியும். இல்லையேல் நல்ல தரமுள்ள விதைகளை பண்படாத களர் நிலத்திலும், கரடு முரடான பாறைகளிலும் விதைகளை விதைப்பதற்கு சமம். அது பயனற்று போகும் தகுதியான நிலத்தில் தரமான விதைகளை போட்டல் தான் தரமான கல்வி கிடைக்கும். ஒரு ஆசிரியரால் மட்டும் தான் மாணவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்க முடியும். நன்னெறி கல்வி நல்குவதால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தொண்டு உள்ளம், மற்றவரை மதித்தல், பெற்றோரை பேணுதல், நாட்டுப்பற்று போன்ற நற்பண்புகளை சிறு வயது முதல் கடைபிடித்து வாழ முடியும் தரமற்றவர்களிடம் சேரும் கல்வி பயன் தராது ஆகவே மாணவர்களை தரமுள்ளவர்களாக மாற்றி கல்வியை அளித்தால் நாடு முன்னேறும்.
ஒரு கத்தியை கொண்டு நாம் பழத்தையும் அறுக்கலாம் கழுத்தையும் அறுக்கலாம். நல்ல ஆசிரியர்கள் தரும் கல்வி என்ற கத்தி பழத்தை மட்டும் அறுக்கக்கூடிய கத்தியாக அமைய வேண்டும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அவர் வாழும் சூழலாலே.... மாணவர்களைப் போல ஆசிரியர்களும் தினம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தன்னலம் இல்லா நெஞ்சம் வேண்டும்.
தாய்போல் பிறன்மனை நோக்க வேண்டும்.
வண்ணங்கள் நோக்கா பார்வை வேண்டும்.
வயதுக்கு ஏற்ற வாழ்வு வேண்டும்.
ஆகாயம் போல் பரந்த இதயம் வேண்டும்.
அழுதாலும் புல்மேல் விழ வேண்டும். கண்ணீர் விழ வேண்டும்.
எப்போதும் சிரிக்கும் நெஞ்சம் வேண்டும்.
ஏழைக்கு எப்போதும் இரங்க வேண்டும்.
மலரோடு உறவாடும் உள்ளம் வேண்டும்.
மனிதநேயமே எப்போதும் மலர வேண்டும்.
பொறி ஐந்தும் அடக்கி ஆள வேண்டும்.
பொய் சொன்னால் நாவு பொசுங்க வேண்டும். கையிரண்டும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் கைமாறு கருதாத துண்டு உள்ளம் வேண்டும் எண்ணங்கள் உண்ண நோக்கி உயர வேண்டும் இருந்தாலும் சிகரத்தை நோக்க வேண்டும். இதுவே ஆசிரியர்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும்.
அப்துல் கலாம் அய்யாவும் ஒரு பொறியாளர். பின்லேடனும் ஒரு பொறியாளர். இருவருமே சிறந்த பொறியாளர்கள். ஆனால் அப்துல் கலாம் ஐயாவின் படிப்பு இந்த நாட்டுக்கே பயன்பட்டது. ஆனால் பின்லேடன் கல்வி அழிவுக்குப் பயன்பட்டது. அப்துல் கலாம் ஐயா சமுதாயத்துக்கு உதவக்கூடிய மனிதராக வாழ்ந்ததற்கு அவருடைய ஆசிரியரே காரணம். ஆசிரியர்களுக்கு இதற்கு மேல் விளக்கம் தேவை இருக்காது என்று நம்புகிறேன்.
தாயென அன்பு செய்து தந்தை போல் பறிவு காட்டி சேயென அனைத்தும் பேசி செவ்வியா நல்லறிவு தந்து வாழ்க்கைக்கு வாழ்வியலை கற்றுத்தரும் ஆசான்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு
LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!
மரம் செடி கொடி மேல் மோகம் கொண்டு.. மேகம் விடும் தூது மழை...!
எது தரமான கல்வி ?
சவரனுக்கு ரூ.92,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!
ஆடம்பரம், படோடபம்.. வீணாகும் உணவுகள்.. கேளிக்கையாகிப் போன திருமண விழாக்கள்
ஜி 20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி 3 நாள் தென் ஆப்பிரிக்கா பயணம்!
{{comments.comment}}