சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில் அறுபது ஆண்டுகால திராவிட ஆட்சிகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்.
கோட்டையை எட்டிப்பிடித்த அவரது அரசியல் அதிரடிகள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும், தற்சமயம் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது அவரது நெற்றியில் மின்னும் அந்த ‘கருப்பு நிற மை’ தான்!
முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் விஜய் கோட் சூட்டுக்கு மட்டும் மாறவில்லை. அவரது நெற்றியில் கருப்பு மையும் எப்போதும் இருப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும். சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் விஜய் தனது நெற்றியில் சிறிய அளவிலான கருப்பு மையை வைத்துள்ளார். இது வெறும் அழகுக்காகவோ அல்லது சாதாரண பொட்டோ அல்ல, இது "அரகஜா வசிய மை" என்ற தகவல் தீயாய் பரவி, தமிழக அரசியலில் பெரும் சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது.
வசிய மையும் ஜோதிடப் பின்னணியும் :

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனி அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றி வேலை விஜய் நியமித்தது முதலே, அவர் ஆன்மீக மற்றும் ஜோதிட ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த 'அரகஜா மை' விவாதமும் உருவெடுத்துள்ளது.
அரகஜா என்பது மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆன்மீகப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு விசேஷமான மையாகும். அதாவது பச்சை கற்பூரம், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள் போன்ற பொருட்கள் கலந்து இந்த வாசனை மை தயாரிக்கப்படுகிறது.
ஜோதிட மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, இந்த மையை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்கு ஜன வசியம், அதாவது சுற்றியுள்ள மக்களைத் தன்வசப்படுத்தும் காந்த சக்தி கிடைக்கும். அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகள் மற்றும் கண் திருஷ்டிகள் முறியடிக்கப்படும். பார்ப்பவர்களைக் கவரும் கம்பீரமான தோற்றமும், சொல்லுக்குச் செல்வாக்கும் கூடும்.
திருச்செந்தூர் ஸ்பெஷல் பூஜை :
விஜய் தற்போது நெற்றியில் வைத்துள்ள அரகஜா மை மட்டுமல்ல, சரியாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று மிகவும் சக்தி வாய்ந்த சத்ருசம்ஹார பூஜையை விஜய் செய்து விட்டு வந்துள்ளதாக சொல்லப்பட்டது. இனி எதிரிகளே இல்லை என்ற நிலை, தொட்டதெல்லாம் வெற்றி, நிலையான புகழ், செல்வாக்கு, பதவி ஆகியவை கிடைப்பதற்காக இந்த பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இந்த பூஜையை விஜய் செய்து விட்டு வந்ததால் தான் இவ்வளவு பிரம்மாண்ட வெற்றியை தேர்தலில் பெற்றுள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் பரவியதால் இப்போது அரகஜா வசிய மை, சத்ருசம்ஹார பூஜை பற்றி அதிகமானவர்கள் கூகுளில் விபரம் தேடி வருகிறார்கள்.
வதந்தியா? வியூகமா?
ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏ.,க்கள் என்ற பெரும்பான்மையை பெற விஜய் மிக கடுமையாக போராடினார். 118 பெரும்பான்மை கிடைக்குமா? கிடைக்காதா என அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் தவெக.,விற்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் அரசை ஆதரிக்கும் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.
இருந்தாலும் கடைசி நிமிடத்தில் யாராவது மனம் மாறி விடுவார்களோ? நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு தப்புமா? என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு புறம் அமமுக எம்எல்ஏ, மறுபுறம் 25 அதிமுக எம்எல்ஏ.,க்கள் விஜய்க்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
நெருக்கடியான அரசியல் சூழலில், 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றுள்ள முதல்வர் விஜய், மக்கள் மத்தியிலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, அனைவரையும் ஈர்க்கும் ஒரு 'வசிய' சக்தியாக மாற இந்த மையைப் பயன்படுத்துகிறார் என வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
ஆன்மீகத்தையும் மதிக்கின்ற ஒரு புதிய அரசியல் பாதையைத் தான் தவெக கையில் எடுத்துள்ளது. எனவே, இது வெறும் கண் திருஷ்டிக்கான பொட்டாகவோ அல்லது விஜய்யின் தனிப்பட்ட நம்பிக்கையாகவோ கூட இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், ‘தளபதி’ விஜய்யின் நெற்றிப் பொட்டு இப்போது கோட்டை வட்டாரத்தின் ‘டிரெண்டிங் மர்மமாக’ மாறிவிட்டது உண்மை!
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெண் முத்தும் பனித்துளியும்
நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)
ஏன் எதற்கு எதனால்?
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
{{comments.comment}}