அடுத்து என்ன.. அடுத்து என்ன.. கேள்வி மனதை பிசைகிறதா..!?

Feb 06, 2023,04:41 PM IST
அடுத்து என்ன?? என்ற கேள்வி மனதை பிசைகிறதா..!! அடுத்து என்ன படிப்பது, அடுத்து என்ன வேலை பார்ப்பது, அடுத்து என்ன சாதிப்பது என்பது முதல் அடுத்த வேலை என்ன சமைப்பது அடுத்து அலமாரியின் எந்த அறையை அடுக்குவது என்பது வரை- அடுத்து என்ற வார்த்தையே நம்மை சிந்தனையில் தான் ஆழ்த்துகிறது..



சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக யோசனையில் ஆழ்ந்து குழம்பிவிடும் படி  ஆகிறது.. அதன் இறுதியில் நிலையில்லா முடிவு கொண்டு, அதை நிறைவேற்ற முயன்று பாதியில் ஏன், எதற்கு போன்ற பல கேள்விகளுடன், மனதில் ஒரு வெற்றிடம் கொண்டு, அயர்ந்து.. இனி நம்மால் ஏதும் செய்ய இயலாது அந்த திறன் இனி இல்லை என்று தோன்றும் நிலை வரலாம்..

ஆனால் அவை உண்மை அல்ல.. அடுத்து என்ற கேள்வியை உடைத்து விட்டு, இன்று என் மன நிம்மதியும் நிறைவும் மட்டும் தான் முக்கியம் என்று உறுதி கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்த முயலுங்கள்.. முதலில் கடினமாக தோன்றினாலும் முயன்றால் நடக்கும்..

பின்பு ஒருநிலை கொண்ட மனதோடு உங்களுடைய "அடுத்து என்ன" என்ற கேள்விக்கு நிலையான பதில் காணுங்கள்.. முந்தைய குழப்ப நிலையில் கொண்ட பதிலில் "என்ன என்ன குறை நிறைகள்" உள்ளது என ஆராயுங்கள்.. அப்போது நிச்சயமாக நல்ல தெளிவு பிறக்கும்..

சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் கறை பட போவதும் இல்லை, சூரிய ஒளியால் பச்சை பசேல் என வளரும் பயிர்கள் சோர்ந்து போவதும் இல்லை... அதே போல் தான், குழம்பிய முடிவு எடுத்து, அதனால் தோற்க நேரிடுவதால் வெற்றி கைக்கு எட்டா கனியாக போவதில்லை..!

செடிகளுக்கு மேகம் தரும் மழையும் வெயில் தரும் இதமும் ஈரண்டுமே தேவை படுவது போல.. குழப்பங்களும் நல்லதே.. அவை வராவிட்டால் நாம் தெளிவாக இருப்பதை எப்படி உணர முடியும்.

குழப்பம் தந்து நமது மூளையை குடைய செய்யும் அந்த தருணங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.. அவை இல்லாமல் ஒருநிலை கொண்ட மனதின் அருமையும், இன்னல் தாங்க வலு கொண்ட நமது மனதின் பலமும் நமக்கு தெரியாலே போகும்.. 

எனவே மனதைப் பிசையும் அடுத்து என்ற கேள்விக்கு நிதானமாக பதில் கொடுங்கள்.. தெளிவான நீரோடை போல சிந்தனைகளிலும், அதன் தொடர்ச்சியாக தீர்வுகளிலும் மனம் இயல்பாகப் பதியும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்