சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யிடம், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசியது பேசு பொருளாக மாறியுள்ளது.
கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விஜய் கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்பியும் கூட அங்கு போவது சரியாக இருக்காது என்று கூறப்பட்டதால் சென்னைக்கு திரும்பினார். சென்னை திரும்பிய விஜய் அங்கிருந்தபடி, தான் இதயம் நொறுங்கிப் போய் உள்ளதாக ஒரு அறிக்கை விடுத்திருந்தார். சென்னை திரும்பிய விஜய் அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். மிகப்பெரும் சோகத்திலும் வேதனையிலும் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் முதல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்துக்கள் கூறியபடி உள்ளனர். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர். பல தலைவர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது, இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்று கூறியுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அனைத்து தரப்பையும் குறை கூறி அனைவரும் சரியாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறு இருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் எந்த அரசியல் கட்சித் தலைவரும் பேசியதாக தகவல்கள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் இன்று முதல் தலைவராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி மூலம் விஜயை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
எந்த தலைவரும் பேசாத நிலையில் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்களை சந்தித்த தமிழக வெற்றிக்கழக கட்சியின் வழக்கறிஞர்கள் குழு கரூர் சம்பவம் திட்டமிட்ட சதியாக தோன்றுகிறது. எனவே இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் அல்லது சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் இது தொடர்பான ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிற்பகலில் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உறுதியளித்திருந்தார்.
இந்த பின்னணியில் ராகுல் காந்தியின் பேச்சு வந்திருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி விஜயுடன் தொடர்பு கொண்டு கரூரில் என்ன நடந்தது எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன் இப்படி நடந்தது என்று விரிவாக கேட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட கால் மணி நேரம் ராகுல் காந்தியும் விஜயும் பேசியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கலும் விஜய்க்கு ஆறுதலும் தெரிவித்து ராகுல் காந்தி பேசியபோதிலும் கூட கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த அவர் விரிவாக கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் அணி சதி செயல் என்று கூறிய பின்னணியில் ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல் பலராலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை விஜய்யிடம் இது தொடர்பாக ராகுல் காந்தி ஏதேனும் கேட்டாரா அதற்கு விஜய் ஏதேனும் சொன்னாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும் இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இல்லை. வேறு எந்த தலைவரும் விஜய்யுடன் தொலைபேசியில் அல்லது நேரிலோ சந்திக்கவோ பேசவோ முயலாத நிலையில் ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பை தேர்ந்தெடுத்தது பலரையும் விழிகள் விரிய செய்துள்ளது.
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!
{{comments.comment}}