டெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது தான் தமிழக அரசியலில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சொல்லி, நேற்று காலை டில்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை விமானத்தில் செய்தியாளர்கள் அவரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லி பயணத்தின் போது சந்திப்பீர்களா என கேள்வி எழுப்பினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலும் அளிக்காமல் கடந்து சென்று விட்டார். அவருடன் அதிமுக.,வின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் டில்லி சென்றதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தெரிவித்த படி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, எடப்பாடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அமித்ஷாவின் இல்லத்திற்கு சென்று, அவரையும் சந்தித்துள்ளார். தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து இரண்டு போலீஸ் வாகனங்களின் பாதுகாப்புடன், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக நிர்வாகிகளும் தனிக்காரில் அமித்ஷா வீட்டிற்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. பிறகு சுமார் 20 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக.,வின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அமித்ஷாவின் இல்லத்தில் இருந்து வெளியே வந்து, காரில் ஏறி சென்றதாக சொல்லப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமியும், அமித்ஷாவின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக காட்டி கொள்வதற்காக அவர்களுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனமும் புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பிறகு தமிழ், இந்தி தெரிந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அமித்ஷாவும், எடப்பாடி பழனிச்சாமியும் தனியாக 10 நிமிடங்களுக்கும் மேல் ஆலோசனை நடத்தியதாக சொல்ப்படுகிறது. அதற்கு பிறகு தனியாக ஒரு காரில் ஏறி, எந்த பாதுகாப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தனியாக தான் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த பிறகு இபிஎஸ் மற்றும் அமித் ஷா இடையே 10 நிமிடம் தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கட்சி இணைப்பு என்ற பெயரில் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உட்பட எந்த தலைவர்களுடனும் பேச வேண்டாம் என்று இபிஎஸ் தரப்பில் அமித் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது இபிஎஸ், அமித் ஷாவிடம் சில விஷயங்களை வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. கட்சிக்குள் இருக்கும் சில பிரச்சனைகளை அவர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகள் குறித்தும் இபிஎஸ் சில முக்கிய விஷயங்களை விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இரு தரப்பும் எந்த மாதிரியான உத்தரவாதங்களைப் பரிமாறிக் கொண்டனர் என்ற விவரம் மட்டும் தெரியவில்லை.
அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு காயா பழமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!
அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?
திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை
SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
{{comments.comment}}