சென்னை : விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவு கிடைத்து விட்டது. அடுத்து எப்போது விஜய் முதல்வராக பதவியேற்பார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அனைவரின் கவனமும் தற்போது ஆளுநர் மாளிகை பக்கம் திரும்பியுள்ளது.
விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு தவெக.,விற்கு பெரும்பான்மை இல்லாமல் இருப்பது தான் காரணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதால் தவெக.,விற்கு ஆட்சி அமைக்க தேவையான 120 இடங்கள் கிடைத்து விட்டது.
அடுத்து, இந்த ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் ஒப்படைத்து, மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து விஜய் மீண்டும் உரிமை கோருவார். ஆனால் அதை ஏற்று ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. இப்போது மீண்டும் ஏதாவது சிக்கல் வருமா என்ற சந்தேகமும் எல்லோரிடமும் உள்ளது.
காரணம், அமமுக எம்எல்ஏ காமராஜிடம் தவெக தரப்பில் ஆதரவு கேட்கப்பட்டதாகவும், அவரும் ஆதரவு கடிதம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் ஆதரவு அளிக்கவில்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் மறுத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்திடும் வீடியோவை தவெக வெளியிட்டது. ஆனால் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என தினகரன் திட்டவட்டமாக மறுத்ததுடன், தவெக.,வின் செயல்பாடு குறித்து மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆளுநரிடம் போலியான ஆதரவு கடிதத்தை தவெக அளித்ததாகவும், குதிரை பேரம் நடப்பதாகவும் தினகரன் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதனால் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள், ஆதரவு கிடைத்தாலும் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அமமுக முன் வைத்த புகார் குறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அமமுக.,வின் குற்றச்சாட்டை பொய் என தவெக நிரூபித்த பிறகே அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்றும் ஆளுநர் சொல்லுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க தவெக.,விற்கு ஆளுநர் அளித்துள்ள கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. அதோடு ஆளுநர், இன்று மாலை கேரளா புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பான்மை கிடைத்தாலும் தவெக ஆட்சி அமைக்குமா? எப்போது ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார்? பதவியேற்பு விழா எப்போது நடக்கும்? என உறுதியாக சொல்ல முடியாத நிலையே தற்போது வரை தமிழக அரசியலில் நீடிக்கிறது.
அதேசமயம், இனியும் ஆளுநர் தாமதப்படுத்த வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது. அப்படிச் செய்தால் அது தேவையில்லாத சட்ட சிக்கலுiக்குள் கொண்டு போய் விடும் அபாயமும் உள்ளதால், ்அனேகமாக மே 13ம் தேதி விஜய் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது.
From Shyness to Speaking: How Puppetry Improved My Student's English
ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஆசிரியர் அளித்த அற்புதம்!
Short Story by N Deepalakshmi: நிலக்கடலை அக்கா
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம்.. இன்று தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
{{comments.comment}}