விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

May 07, 2026,05:43 PM IST

சென்னை : விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பெரும்பான்மை பலத்தை என்னிடம் காட்டுங்கள். பிறகு ஆட்சி அமைக்கலாம் என ஆளுநர் சொல்கிறார். ஆனால் முதல்வராக பதவியேற்று விட்டு, பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்த பிறகும் ஆளுநர் அழைக்காததால், கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக இன்றும் ஆளுநரை சந்தித்துள்ளார் விஜய்.


திராவிட கட்சிகள் வேண்டாம். மாற்றம் வேண்டும் என்று தான் மக்கள் தவெக.,விற்கு ஓட்டளித்துள்ளனர். இந்த யதார்த்தத்தையும், மக்களின் மனநிலையையும் புரிந்து கொண்டதால், விஜய் ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓப்பனாக கூறி விட்டார். 


அதிமுக தற்போது வரை கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது. ஆனால் அதிமுகவின் எண்ணம் என்ன என்பதை மூத்த தலைவர் செம்மலை கூறியுள்ளார். அதாவது, ஈபிஎஸ் கிங் மேக்கர் அல்ல.. அவர் கிங் என்றும், தீர்க்கமான முடிவை எடுப்பார் என்றும் செம்மலை கூறியுள்ளார்.




இந்த நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு ஆளுநர் கால தாமதம் செய்து வருவதால், தற்போது தவெகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் கூட,  பாஜக மீது கோபம், அதிருப்தி திரும்ப வாய்ப்பு பெருகி வருகிறது. பாஜகதான் மறைமுகமாக விஜய்யை முதல்வராக விடாமல் தடுக்கிறது என்ற கோபம் மக்கள் மனதில் ஏற்பட வாய்ப்புள்ளது.


ஆளுநர் மூலமாக விஜய் முதல்வராவதை பாஜக தடுப்பது சரியல்ல என விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆகியோர் கூறி வருகிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபை தான். ஆளுநர் மாளிகை கிடையாது என அவர்கள் கூறி உள்ளனர். இதே எண்ணம் மக்கள் மனதிலும் தோன்றலாம். ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, ஆளுநர் பரிந்துரை செய்தால், 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மறு தேர்தல் நடத்தப்படும்.


அப்படி மறுதேர்தல் நடத்தப்பட்டால் அது விஜய்க்கு மிகப்பெரிய சாதமாக அமையும். அந்த தேர்தலில் தவெக 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்கும் அதிக வாய்ப்புக்கள் ஏற்படும். ஏற்கனவே சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு 4 இடங்களில் வாக்களித்து தேர்வு செய்த மக்கள், பாஜக.,விற்கு ஒரே ஒரு இடத்தில் தான் வாய்ப்பு தந்துள்ளனர். அவரும் போராடி தான் வெற்றி பெற்றார். இது மக்களின் பாஜக.,விற்கு எதிரான மனநிலையையே காட்டுகிறது. ஒருவேளை விஜய்க்கு எதிராக எது நடந்தாலும் அது பாஜக.,விற்கு எதிராக தான் திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் பாஜக எதிர்ப்பு மனநிலை தமிழக மக்களிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். சட்டசபையில் அவர் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கட்டும். நிரூபிக்க முடியாமல் போனால் மற்ற ஆப்ஷன்களை ஆளுநர் யோசிக்கலாம். இதுதான் சரியான நடைமுறையாகவும் இருக்க முடியும். இது நடக்காமல் போனால் மக்களின் ஆதரவை மேலும் மேலும் விஜய் பெறவே வாய்ப்பு ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்