லண்டன்: லண்டன் மக்களை தினசரி ஆச்சரியப்படுத்தி வருகிறார் பான்ஸ்கி.. இந்தப் பெயர் மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் இவர் உண்மையில் யார், இவரது முகம் எப்படி இருக்கும், இவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று யாருக்குமே இதுவரை தெரியவில்லை.
அப்படி என்னதான் செய்து விட்டார் பான்ஸ்கி?
லண்டன் நகரத்து தெருக்களில் உள்ள வீட்டுச் சுவர்கள், வணிக கட்டடங்கள், பாழடைந்த கட்டடங்கள் என கிடைக்கும் சுவர்களில் எல்லாம் அட்டகாசமான ஓவியங்களைத் தீட்டுவதுதான் இவரது வேலை. சும்மா சொல்லக் கூடாது. ஓவியங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். சத்தம் போடாமல் வந்து ஓவியங்களைத் தீட்டி விட்டு ப் போய் விடுவார் பான்ஸ்கி.
டைமிங்கான ஓவியங்களையும், ஜாலியான ஓவியங்களையும் இவர் வரைகிறார். டிரெண்டிங் விஷயங்களை வைத்தும் இவர் ஓவியம் வரைகிறார். மர்மான முறையில் வந்து ஓவியம் வரைந்து செல்லும் பான்ஸ்கி லண்டன் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் உண்மையில் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை. முகமூடி போட்டுக் கொண்டுதான் இவர் ஓவியங்களை வரைகிறார்.
ஒவ்வொரு தீமாக வைத்து இவர் ஓவியம் வரைகிறார். லேட்டஸ்டாக இவர் விலங்குகளை தீமாக வைத்து 9 படங்களை வரைந்துள்ளார். அனைத்துமே முரல் வகை ஓவியங்கள் ஆகும். லண்டன் உயிரியல் பூங்காவிலிருந்து பறவைகள் வெளியே வருவது, கொரில்லா என இவர் வரைந்த அனைத்து ஓவியங்களுமே மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த ஓவியங்களை புகைப்படம் எடுக்க கூட்டம் குவிகிறது.
இவர் வரைந்த மலையாடு, யானைகள், குரங்குகள் உள்ளிட்டவை சூப்பர் ஹிட் ஓவியங்களாக மாறியுள்ளன. இவர் தனது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்துள்ளார். 13 மில்லியன் பாலோயர்களுடன் கூடிய இந்த பக்கத்தில் தனது ஓவியங்களை தொகுத்து வைத்திருக்கிறார். இவர் யாரையும் இதுவரை பாலோ செய்யவில்லை.
பான்ஸ்கி என்ற பெயரும் ஒரிஜினல்தானா என்று தெரியவில்லை. ஆனால் லண்டனில் பான்ஸ்கி என்ற பெயரில் மியூசியம் உள்ளது. அந்தப் பெயரைத்தான் இந்த நபரும் வைத்துக் கொண்டுள்ளார் போலும். இவரது பெயர் மட்டுமல்ல, இவரது அடையாளமும் மர்மமாக இருப்பதால் இவர் குறித்த ஆர்வம் லண்டனில் அதிகரித்து வருகிறது. பிபிசியே இவரைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}