அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

Apr 21, 2025,05:15 PM IST

வாடிகன் சிட்டி:  அர்ஜென்டினாவில் பிறந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ். சாதாரண ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து கடவுளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்.


போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மாரியோ பெர்கோக்லியோ .இவர் டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில்  பிறந்தார். அவரது தந்தை ஒரு ரயில்வே தொழிலாளி, தாய் ஒரு இல்லத்தரசி.


வேதியியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர், அவர் மத வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு, இயேசு திருசபையில் சேர்ந்தார். சிலியில் உள்ள இயேசு சபையின் மனிதநேய கல்வி நிறுவனத்தில் மனிதநேய படிப்புகளை முடித்தார். தொடர்ந்து பியூனஸ்அயர்ஸ் நகரில் இறையியல் துறையில் பட்டம் பெற்றார்.


1969 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி, அவர் குருவாக நியமிக்கப்பட்டார். இயேசு சபையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1992 ஆம் ஆண்டில், புவெனஸ் ஐரிஸின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டில், புவெனஸ் ஐரிஸின் பேராயராக நியமிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில், இரண்டாம் ஜான் பால் போப்பால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.




போப் பதவி:


பெனடிக்ட் XVI போப் பதவியிலிருந்து விலகிய பின்னர், 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி, கத்தோலிக்க திருச்சபையின் 266 வது போப்பாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சிஸ் என்ற பெயரை அவர் தேர்ந்தெடுத்தது, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் பாதுகாவலரான அசிசியின் புனித பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்தது.


போப் பிரான்சிஸ் எளிமையான வாழ்க்கை முறை, ஏழைகள் மற்றும் அகதிகளுக்கான அவரது கவலை, மற்றும் திருச்சபையில் சீர்திருத்தங்களுக்கான அவரது அழைப்பு ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். மிகவும் சிம்பிளாக இருக்கக் கூடியவர்.


சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது "லௌடாடோ சி" (Laudato si') என்ற சுற்றுமடல்  இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. திருச்சபையை மேலும் திறந்த மற்றும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். 


உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஆன்மீகத் தலைவராக தொடர்ந்து சேவை செய்து வந்தார். 88 வயதான கிறித்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் சமீபத்தில் நிமோனியா உள்ளிட்ட தொற்று காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து மீண்டும் திருப்பணிக்கு வந்த நிலையில், அவர் இன்று காலமானார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்