சென்னை : ஆகஸ்ட் 17ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு போட்டியாக ஆகஸ்ட் 9ம் தேதி தனது தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ளதாக அன்புமணி ராமதாசும் அறிவித்துள்ளார். இதனால் எந்த கூட்டம் நடக்கும், கட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற திக்திக் நிமிடங்களில் இருந்து வருகிறார்கள் பாமக.,வினர்.
ஆனால் லேட்டஸ்டாக கசிந்துள்ள அரசியல் வட்டார தகவல்களின் படி, ராமதாஸ் கூட்ட உள்ள பொதுக்குழு வழக்கமான கட்சி கூட்டம் கிடையாதாம். இதில் தான் அவரது அரசியல் அனுபவமும், மாஸ்டர் பிளானும் அடங்கி உள்ளதாம். இதனால் ஆகஸ்ட் 17ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள பாமக தொண்டர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் காத்துக் கொண்டிருக்கிறதாம்.
மகன் அன்புமணி ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவிகள் வைத்து தனது தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்த கையோடு, இந்த விவகாரம் தொடர்பாக போலீசிலும் ராமதாசின் உதவியாளர் சென்று புகார் அளித்துள்ளார். அதே சூட்டோடு, தான் அறிவித்து பொதுக் குழுவிற்கு 10 நாட்களுக்கு முன்பு அன்புமணி நடத்துவதாக அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கும் தடை வாங்கும் வேலைகளையும் மிக தீவிரமாக செய்து வருகிறாராம் ராமதாஸ். அப்பா-மகன் மோதல் விவகாரத்தில், "அனைவர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் ராமதாஸ், ஓட்டுக்கேட்கும் அளவிற்கு சென்ற அன்புமணி மீது மட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. வரிசையாக குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும் தனது மகன் என்ற காரணத்தால் அன்புமணி மீது மட்டும் நடவடிக்கை பாயவில்லை" என பலரும் விமர்சித்து வருவது ராமதாசின் காதிற்கு சென்றுள்ளது.
இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுவதற்காக தான் இந்த பொதுக்குழு கூட்டத்தையே ராமதாஸ் கூட்டி உள்ளாராம். பொதுக் குழு கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என ராமதாசே தனது கைப்பட கையெழுத்திட்ட கடிதங்கள் 5000 க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். கட்சியின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் தான் இந்த ஏற்பாடாம். அதாவது, தனது இறுதி மூச்சு உள்ளவரை தானே கட்சியின் அனைத்து பொறுப்புக்கள், அதிகாரங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வரையில் கட்சியின் அடிப்படை விதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளாராம் ராமதாஸ். கட்சியின் அதிகாரங்களில் அன்புமணியோ அல்லது மற்ற யாருமோ எந்த உரிமையும் சட்டப்பூர்வமாக கோர முடியாத வகையில் கட்சியின் சட்டங்கள், விதிகள் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாம்.
பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவற்றிலும் மாற்றம் செய்ய ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். அது மட்டுமல்ல, ஏற்கனவே கூட்டணி குறித்து தமிழகத்தின் பிரதான கட்சி ஒன்றுடன் ராமதாஸ் பேசி வருவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் கூறப்பட்டு வருவது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ராமதாஸ் கருத்து கேட்க போகிறாராம். சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்த தன்னுடைய கருத்துக்களை கூறி, அதற்கு கட்சியினரின் கருத்துக்களை கேட்க போகிறாராம். கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டு, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்த பிறகோ, சட்டசபை தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஹன்சிகா மோத்வானிக்கு என்னாச்சு.. கணவர் புகைப்படம், கல்யாண வீடியோவை நீக்கினார்!
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
{{comments.comment}}