தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??

Aug 08, 2025,03:45 PM IST

சென்னை : சமீபத்தில் பல கட்சி தலைவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் சென்றதும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்று சந்தித்ததும் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. திமுக கூட்டணியில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று கூட மீடியாக்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரேமலதாவை முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி சந்தித்துப் பேசியுள்ளார்.


முதல்வரை சந்தித்து விட்டு வந்த பிறகு அளித்த பேட்டியில், "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை.  எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நடக்கும் போது அனைத்தும் புரியும்" என சூசகமாக பதிலளித்து விட்டு சென்றார் ஓபிஎஸ். ஆனால் பிரேமலதா விஜயகாந்த்தோ, " இரு கட்சிக்காரர்கள் சந்தித்துக் கொண்டாலே உடனே கூட்டணி தானா?" என காட்டமாக கேட்டு விட்டு சென்றார். நலம் விசாரிக்க தான் சென்றோம் என இருவரும் சொன்னாலும், இந்த சந்திப்பிற்கு பிறகு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அது இவர்கள் திமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தான் பெரும்பாலானவர்களின் சந்தேகமாக உள்ளது.




இந்த சந்திப்பிற்கு பிறகு அரசியல் காரணம் இருப்பது உண்மை தான். ஆனால் திமுக கூட்டணி அமைக்கும் காரணம் மட்டும் கிடையவே கிடையாது என அடித்துச் சொல்கின்றன அரசியல் வட்டார தகவல்கள். பிறகு எதுக்கு இந்த சந்திப்பு என்றால், இருவர் சந்திப்பிற்கு பிறகும் இரு வேறு விதமான காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, இருவருமே தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக முதல்வர் உடனான சந்திப்பை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் உண்மையான காரணமாம்.


ஓபிஎஸ் சந்தித்ததற்கு காரணம், பாஜக.,விடம் தனது செல்வாக்கை காட்டுவதற்காக தானாம். அதிமுக.,வுடன் இணைய முயற்சி செய்து அது நடக்கவில்லை. பாஜக.,வில் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்தார் அதுவும் நடக்கவில்லை. பிரதமரை சந்திக்க அனுமதி கூட வழங்கவில்லை. ஆனால் ஓபிஎஸ், முதல்வரை சென்று சந்தித்து விட்டு வந்த பிறகு, நயினா் நாகேந்திரன் ஓபிஎஸ்.,ஐ அழைத்து பேசினாராம். அவரை சமாதானப்படுத்தும் விதமாக, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அடுத்த முறை பிரதமர் தமிழகம் வரும் போது கண்டிப்பாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்பது உள்ளிட்ட பல விதமாக பேசி உள்ளார்களாம். முதல்வருடனான சந்திப்பை பயன்படுத்தி, தனது நிபந்தனைகள் பலவற்றிற்கும் பாஜக.,விடம் சம்மதம் பெறும் நிலைக்கு வந்து விட்டாராம் ஓபிஎஸ்.


ஒருவேளை ஓபிஎஸ் திமுக உடன் கூட்டணி சேர்ந்தால் என கேட்டால், அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தானாம். என்ன தான் திமுக தலைமையுடன் பேசி கூட்டணியில் சேர்ந்து கொண்டாலும், களத்தில் போட்டி என்று பார்த்தால் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி தொகுதிகளில் தங்க தமிழ்செல்வனுக்கும், ஓபிஎஸ்.,க்கும் தான். ஓபிஎஸ்.,க்கு எதிராக இறங்கி வேலை செய்யும் முக்கிய நபராக தங்க தமிழ்செல்வன் இருக்கிறார். இவர் தற்போது திமுக தொகுதியில் இணைந்து, எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார். இவர் ஓபிஎஸ்.,ஐ கூட்டணிக்குள் சேர்க்க நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார். மற்றொரு புறம் அதிமுக.,வில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச் செல்வனுக்கு கட்சியில் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் ஏற்கனவே திமுக.,வினர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இந்த சமயத்தில் ஓபிஎஸ்.,யும் சேர்த்தால் அது மிகப் பெரிய குழப்பத்தை உருவாக்கி விடும் என்பது திமுக தலைமைக்கு நன்கு தெரியும்.




மற்றொரு புறம் பிரேமலதா விஜய்காந்த், முதல்வரை சந்தித்ததற்கு ஒரே காரணம், அதிமுக.,வுடன் நடக்கும் கூட்டணி பேரத்தை உயர்த்துவதற்காக மட்டும் தான் என சொல்லப்படுகிறது. நாங்கள் கேட்பதை தர மறுத்தால் திமுக கூட்டணிக்கு போகும் வாய்ப்பை பயன்படுத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம் என அதிமுக.,விற்கு மறைமுகமாக உணர்த்துவதற்காக தான் அவர் இந்த சந்திப்பை முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில்தான் பிரேமலதா விஜயகாந்த்தை, முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி சந்தித்துப் பேசியுள்ளார். அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே வீரமணி, பிரேமலதாவைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதை வீரமணியே உறுதிப்படுத்தியுள்ளார். சந்திப்புக்குப் பின்னர் வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேமுதிகவின் எதிர்கால நலன் குறித்துப் பேசவே பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தோம் என்று அவர் கூறியுள்ளார்.


இதை வைத்துப் பார்க்கும்போது தேமுதிக, திமுக பக்கம் போய் விடாமல் தடுக்க அதிமுக தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. அதிமுக தரப்பிடம், தேமுதிக வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் தேமுதிக, அதிமுக கூட்டணியிலேயே தங்கி விட வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?

news

தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??

news

தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்