நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

Nov 23, 2024,01:33 PM IST

சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை தான் சந்தித்ததை வைத்து வதந்தி கிளப்பக் கூாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலு கண்டித்துள்ளார்.


முன்பு அதிமுகவில் இருந்தவர் நயினார் நாகேந்திரன். மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர். பின்னர் காலப் போக்கில் அதிமுகவில் ஒதுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலிலும் கூட போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.


இந்த நிலையில் நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசினார். இதை வைத்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகின. இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.


அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்